லாரி -- வேன் பயங்கர மோதல்ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்

Added : ஆக 31, 2022 | |
Advertisement
திருவொற்றியூர், எண்ணுார் விரைவு சாலையில், மினி வேன் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த வேன், நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியில் மோதி அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். சென்னை, எண்ணுார் காட்டுப்பள்ளி துறைமுகம், எல்.என்.டி., நிறுவனத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்கள் ஒன்பது பேர், பிராட்வேயில்
லாரி -- வேன் பயங்கர மோதல்ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்


திருவொற்றியூர், எண்ணுார் விரைவு சாலையில், மினி வேன் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த வேன், நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியில் மோதி அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். சென்னை, எண்ணுார் காட்டுப்பள்ளி துறைமுகம், எல்.என்.டி., நிறுவனத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்கள் ஒன்பது பேர், பிராட்வேயில் இருந்து மினி வேனில் நேற்று வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.திருவொற்றியூர், எண்ணுார் விரைவு சாலையில், கே.வி.கே.குப்பம் அருகே வந்தபோது டாரஸ் லாரி ஒன்று மினிவேனில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி உருக்குலைந்தது.இதில், துாத்துக்குடியைச் சேர்ந்த அருண் ஸ்டீபன், 34, என்பவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.படுகாயமடைந்த வேனில் இருந்த ஓட்டுனர் சந்துரு, வெங்கட், சுமன், டில்லி, பிரபு, முத்து உள்ளிட்ட ஒன்பது பேரை, அருகில் இருந்தோர் மீட்டு, அவசர சேவை வாகனமான '108' ஆம்புலன்ஸ் வாயிலாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X