சவுதி பெண்ணுக்கு 45 ஆண்டு சிறை

Added : ஆக 31, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
துபாய்:சமூக வலைதளம் வாயிலாக, நாட்டின் சமூக ஒற்றுமையை சீர்குலைத்ததாக குற்றஞ்சாட்டி, சவுதி அரேபிய பெண் ஒருவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 45 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்த நவுரா பின்த் சயீத் அல்- - கஹ்தானி என்ற பெண், சமூக வலைதளங்களில், பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், இவர் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும்

துபாய்:சமூக வலைதளம் வாயிலாக, நாட்டின் சமூக ஒற்றுமையை சீர்குலைத்ததாக குற்றஞ்சாட்டி, சவுதி அரேபிய பெண் ஒருவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 45 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்த நவுரா பின்த் சயீத் அல்- - கஹ்தானி என்ற பெண், சமூக வலைதளங்களில், பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், இவர் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதாக குற்றஞ்சாட்டிய நீதிமன்றம், அவருக்கு 45 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அல்- - கஹ்தானி சமூக வலைதளத்தில் எதை பதிவிட்டார் அல்லது அவர் குறித்த விசாரணை எங்கு நடைபெற்றது என்பது குறித்து தகவல் இல்லை. இதற்கு முன்னதாக, பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த மாணவி சல்மா அல்-ஷெஹாப்பிற்கும் சமூக அமைதியை குலைத்ததாக குற்றம்சாட்டி, 34 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அல் - -கஹ்தானிக்கு 45 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அமெரிக்காவின் மனித உரிமை அமைப்பான 'ப்ரீடம்' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
01-செப்-202213:38:19 IST Report Abuse
jayvee கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகளின் பண பலத்துடன் இதே வேலைகளை செய்து வரும் இதை பெண்களுக்கும் இதே போன்ற தண்டனையை கொடுக்கவேண்டும்.. இங்கு வெறும் நான்கு மாதம்தான்.. அதுவம் பெயிலுடன் தண்டனை கிடைக்கும்
Rate this:
Cancel
01-செப்-202206:14:24 IST Report Abuse
வீரா இந்தியாவிலும் NGOக்களில் பெண்கள் என்ற போர்வையில் வேளை செய்யும் சிலர் நாட்டிற்கு எதிராக பேசி வருகின்றனர். கேரளா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இவர்கள் செய்யும் அநியாயங்களுக்கு அளவில்லை. சவூதி மாதிரி இந்தியாவும் இவர்களை சிறையில் தள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X