வாலிபரை வெட்டியநால்வருக்கு 'காப்பு'

Added : ஆக 31, 2022 | |
Advertisement
அம்பத்துார், காதல் பிரச்னையில் வாலிபரை வெட்டிய தாய், மகன் உட்பட நால்வர் கைதாகினர்.சென்னை அம்பத்துார் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், 21, என்பவரது 19 வயது தங்கை, அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லுாரியில், பிஎஸ்சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார்.இவரும், பட்டாபிராம் நேரு நகரைச் சேர்ந்த மதியழகன், 21, என்பவரும் காதலித்துள்ளனர்.இதை அறிந்த மனோஜ்குமார், தங்கையை



அம்பத்துார், காதல் பிரச்னையில் வாலிபரை வெட்டிய தாய், மகன் உட்பட நால்வர் கைதாகினர்.சென்னை அம்பத்துார் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், 21, என்பவரது 19 வயது தங்கை, அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லுாரியில், பிஎஸ்சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார்.இவரும், பட்டாபிராம் நேரு நகரைச் சேர்ந்த மதியழகன், 21, என்பவரும் காதலித்துள்ளனர்.இதை அறிந்த மனோஜ்குமார், தங்கையை கண்டித்துள்ளார். இதனால், அவரும் கடந்த மூன்று மாதங்களாக மதியழகனுடன் பேசாமல் இருந்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மதியழகன், நேற்று முன்தினம் இரவு, தன் தாய் நிறைமதி, 39; மற்றும் உறவினர்கள் ராஜ்குமார், 39; ஹரி, 54; ஆகியோருடன் மனோஜ்குமார் வீட்டிற்குச் சென்று தகராறு செய்தனர்.அப்போது, மனோஜ்குமாரை கத்தியால் வெட்டினர். பலத்த காயமடைந்த அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விசாரித்த அம்பத்துார் போலீசார், நேற்று மேற்கண்ட நால்வரையும் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X