பேரூர் மடத்தில் நுால் வெளியீட்டு விழா

Added : ஆக 31, 2022 | |
Advertisement
பேரூர் : பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், நூல் வெளியீட்டு விழா நடந்தது.பேரூர் தமிழ் கல்லூரி சார்பில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், மாத குருபூஜை வழிபாட்டை ஒட்டி, தமிழ் கல்லூரியின் முதல் முதல்வரான கோவைக்கிழார் எழுதிய, 'காஞ்சிமாநதி' என்னும் வரலாற்று நாடக நூல் வெளியீட்டு விழா, பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில்
பேரூர் மடத்தில் நுால் வெளியீட்டு விழா

பேரூர் : பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், நூல் வெளியீட்டு விழா நடந்தது.

பேரூர் தமிழ் கல்லூரி சார்பில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், மாத குருபூஜை வழிபாட்டை ஒட்டி, தமிழ் கல்லூரியின் முதல் முதல்வரான கோவைக்கிழார் எழுதிய, 'காஞ்சிமாநதி' என்னும் வரலாற்று நாடக நூல் வெளியீட்டு விழா, பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நடந்தது.இந்த நூலில், காஞ்சிமாநதி மற்றும் கொங்கு நாட்டின் வரலாற்றை நாடக பாங்கில், கோவைக்கிழார் எழுதியுள்ளார்.

புத்தகமாக அச்சிடப்படாமல் இருந்த இந்நூலை, தவத்திரு சிதம்பர அடிகளார் நூலகம் தற்போது நூலாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது. விழாவில், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் நூலை வெளியிட, பேரூர் தமிழ் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராஜேஸ்வரி முதல் பிரதியை பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X