பணியாளர்கள் பற்றாக்குறைஅரசு பஸ்கள் நிறுத்திவைப்பு

Added : செப் 01, 2022 | |
Advertisement
புதுக்கோட்டை:ஆலங்குடி அரசு பணிமனையில் டிரைவர், கண்டக்டர்கள் பற்றாக்குறையால், பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பணிமனையில் இருந்து, ஆலங்குடி சுற்று வட்டார கிராமங்களுக்கு, 14 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பற்றாக்குறை காரணமாக, சில டவுன் பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால்,

புதுக்கோட்டை:ஆலங்குடி அரசு பணிமனையில் டிரைவர், கண்டக்டர்கள் பற்றாக்குறையால், பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பணிமனையில் இருந்து, ஆலங்குடி சுற்று வட்டார கிராமங்களுக்கு, 14 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பற்றாக்குறை காரணமாக, சில டவுன் பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணிக்கு வரும் டிரைவர், கண்டக்டர்கள் ஓய்வெடுக்க முடியாமல், தொடர் வேலை காரணமாக அவதிப்படுகின்றனர்.இதே போல, புதுக்கோட்டை, அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, மணமேல்குடி, விராலிமலை, இலுப்பூர் அரசு பணிமனையிலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பற்றாக்குறையால், பஸ்கள் நிறுத்தி வைக்கும் நிலை உள்ளது.

எனவே, போதுமான பணியாளர்களை நியமித்து, அனைத்து வழித்தடங்களிலும் தடையின்றி பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X