விநாயகர் சதுர்த்தி விழா: விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்

Added : செப் 01, 2022 | |
Advertisement
கூடலூர்: முதுமலையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் விநாயகருக்கு பூஜை செய்து வணங்கியது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா இன்று (ஆக. 31), மாலை சிறப்பாக நடந்தது. இதற்காக வளர்ப்பு யானை அலங்கரித்து வரிசையில் நிறுத்தப்பட்டது. விழாவை முன்னிட்டும் அங்குள்ள விநாயகர் கோவிலில் பழங்குடியினர்
 விநாயகர் சதுர்த்தி விழா: விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்

கூடலூர்: முதுமலையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் விநாயகருக்கு பூஜை செய்து வணங்கியது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா இன்று (ஆக. 31), மாலை சிறப்பாக நடந்தது. இதற்காக வளர்ப்பு யானை அலங்கரித்து வரிசையில் நிறுத்தப்பட்டது. விழாவை முன்னிட்டும் அங்குள்ள விநாயகர் கோவிலில் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜை செய்தனர்.
தொடர்ந்து வளர்ப்பு யானைகள் மசினி, கிருஷ்ணா ஆகியவை மணி அடித்து கோவிலை வளம் வந்து பூஜை செய்ததுடன், விநாயகரை வணங்கியது. அப்போது, பழங்குடியினர் பாரம்பறியம் இசை இசைத்தனர்.

தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுடன் பழங்கள், பொங்கல் வழங்கப்பட்டது. அதே போன்று , அபயாரணம் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டது. விநாயகர் கோவிலில் வளர்ப்பு யானைகள் நடத்திய பூஜை, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. விழாவில், முதுமலை துணை இயக்குநர் வித்யா, வனச்சரகர்கள், வன ஊழியர், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X