மன உறுதியே மகா சக்தி:: சாதனைக்கு உயரம் தடையில்லை

Added : செப் 01, 2022 | |
Advertisement
தங்கவயல்,--கால் பந்தாட்டத்துக்கு புகழ் பெற்ற இடமாக விளங்கிய தங்கவயல், நாற்பது ஆண்டுகளாக தொய்வடைந்து காணப்படுகிறது. ஊக்கப்படுத்த போதிய வசதியில்லாததால் பொலிவிழந்துள்ளது. கால் பந்தாட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க பெமல் ஊழியர் 'குள்ள' மனிதர் நவகுமார் இலவச பயிற்சி அளித்து வருகிறார்.தங்கவயல் சாம்பியன் ரீப் ஹைகிரவுண்ட் பகுதியில் பல கால்பந்து வீரர்கள் உருவாகி உள்ளனர்.
மன உறுதியே மகா சக்தி:: சாதனைக்கு உயரம் தடையில்லை



தங்கவயல்,--கால் பந்தாட்டத்துக்கு புகழ் பெற்ற இடமாக விளங்கிய தங்கவயல், நாற்பது ஆண்டுகளாக தொய்வடைந்து காணப்படுகிறது. ஊக்கப்படுத்த போதிய வசதியில்லாததால் பொலிவிழந்துள்ளது. கால் பந்தாட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க பெமல் ஊழியர் 'குள்ள' மனிதர் நவகுமார் இலவச பயிற்சி அளித்து வருகிறார்.தங்கவயல் சாம்பியன் ரீப் ஹைகிரவுண்ட் பகுதியில் பல கால்பந்து வீரர்கள் உருவாகி உள்ளனர். இவர்கள், மும்பை இண்டியன்ஸ், மொஹமதியன் ஸ்போர்ட்டிங்ஸ், சென்னை ஐ.சி.எப்., கேரளா போலீஸ், பெங்களூரு ஹெச்.ஏ.எல்., எம்.இ.ஜி., 515 ஒர்க் ஷாப், ஐ.டி.ஐ., ஹெச்.எம்.டி., பி.இ.எல்., என பல்வேறு நிறுவனங்களில் தேர்வாகி விளையாட்டு அணிகளில் விளையாடியுள்ளனர். இந்திய தேசிய அணியில் பலர் இடம்பெற்று சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.இந்த மைதானத்தில், 4.4 அடி உயரம் உள்ள பெமல் ஊழியர் நவகுமார், 45, என்பவர் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இலவசமாக கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார்.குள்ளமாக இருப்பதால் பாதிப்பு இருப்பதாக கருதுவது இல்லை. எதிலும் மன உறுதி இருந்தால் சாதிக்க முடியும் என்கிறார்.உற்சாகத்துடன் அவர் கூறியதாவது:நான், சதர்ன் ரேஞ்சர்ஸ் கிளப் மூலம் கால்பந்து விளையாடி வந்தேன். இதன் மூலம் கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்றேன். பெங்களூருவில் 2016ல் 'குள்ள' மனிதர்களுக்காக அகில இந்திய கால்பந்து 'லீக்' போட்டியில் விளையாட தேர்வானேன். இதற்காக, எம்.இ.ஜி., ராணுவ மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கால்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடினேன்.இதுமட்டுமின்றி 2017ல் கன்டீரவா ஸ்டேடியத்தில் நடந்த குள்ள மனிதர்களுக்கான தடகளப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசுகளை வென்றேன்.எனக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. எனது ஆர்வத்தை அறிந்து, பெமல் தொழிற்சாலையில் மிகவும் உற்சாகம் அளித்து வருகின்றனர். நண்பர்களும் ஊக்கம் அளித்து வருகின்றனர். நான் பயிற்சி அளித்த 17 வயதுக்கு உட்பட்ட கோலார் மாவட்ட அணியினர் அண்மையில் முதல் பரிசு பெற்றுள்ளனர்.கால்பந்தாட்டத்தில் தங்கவயலுக்கென தனிப்பெருமை உள்ளது. அதனை மறைய விடக் கூடாது என்பதற்காக இளைஞர்களுக்காக பயிற்சி அளித்து வருகிறேன். பெமல் தொழிற்சாலையின் ஆர்.சி., -2 பிரிவில் 9 ஆண்டுகளாக தொழிலாளியாக பணியாற்றி வருகிறேன்.பிற மாநிலங்களின் கம்பெனிகளுக்கு, கால்பந்து விளையாட்டு வீரர்களை தங்கவயலில் இருந்தே பெற்றுள்ளனர். எனக்கு விமல், செந்தில் ஆகிய இளைஞர்கள் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.சாம்பியன் ஹைகிரவுண்டில் 8 வயது சிறுவர் முதல் 20 வயதுடையோர் வரை பயிற்சி பெறுகின்றனர். 2022- கோடை கால்பந்து பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் 200 பேர் பங்கேற்றனர்.கால்பந்து விளையாட்டில் சிறுவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் விளையாட, உரிய மைதானம் இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களை இனியாவது சீர்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X