42 ஆண்டுகளாக நடக்கும் வராஹி நீர்ப்பாசன பணிகள் மந்தம்| Dinamalar

42 ஆண்டுகளாக நடக்கும் வராஹி நீர்ப்பாசன பணிகள் மந்தம்

Added : செப் 01, 2022 | |
உடுப்பி-உடுப்பி மாவட்டமாக உருவாகி, 25 ஆண்டுகளாகியும், தட்சிண கன்னடத்தில் இருந்த போது, ஆரம்பமான வராஹி நீர்ப்பாசன திட்டப்பணிகள் இன்னும் முடியவில்லை.கர்நாடகாவின், பெரிய மாவட்டமாக இருந்த தட்சிண கன்னடா பிரிக்கப்பட்டு, 1997 ஆகஸ்ட் 25ல் உடுப்பி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதில் குந்தாபுரா, கார்கலா, பிரம்மாவரா, உடுப்பி, காபு, பைந்துார், ஹெப்ரி தாலுகாக்கள்
42 ஆண்டுகளாக நடக்கும் வராஹி நீர்ப்பாசன பணிகள் மந்தம்

உடுப்பி-உடுப்பி மாவட்டமாக உருவாகி, 25 ஆண்டுகளாகியும், தட்சிண கன்னடத்தில் இருந்த போது, ஆரம்பமான வராஹி நீர்ப்பாசன திட்டப்பணிகள் இன்னும் முடியவில்லை.கர்நாடகாவின், பெரிய மாவட்டமாக இருந்த தட்சிண கன்னடா பிரிக்கப்பட்டு, 1997 ஆகஸ்ட் 25ல் உடுப்பி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதில் குந்தாபுரா, கார்கலா, பிரம்மாவரா, உடுப்பி, காபு, பைந்துார், ஹெப்ரி தாலுகாக்கள் சேர்க்கப்பட்டது.உடுப்பி மாவட்டமாக உருவாகி, 25 ஆண்டுகள் கடந்துள்ளது. இதை விட 'வராஹி திட்டம்' பழமையானது. தட்சிண கன்னடாவில் இருந்த போது, 1980ல் அரசின் அனுமதி பெற்று, 1989ல் திட்டப்பணிகள் துவங்கப்பட்டது.அன்றைய முதல்வர் குண்டுராவ், இத்திட்டத்தை துவக்கி வைத்தார். அதே நாளில் பிரம்மாவரா, பைகாடியில் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் அடிக்கல் நாட்டினார்.வராஹி ஆற்றின் நீரால், கரும்பு பயிரிட்டு பிரம்மாவரா சர்க்கரை ஆலைக்கு வினியோகித்து, உள்ளூரிலேயே வேலை வாய்ப்பு உருவாக்குவது, ஆலை அமைத்ததன் நோக்கமாக இருந்தது. 1985ல் 110 ஏக்கர் பரப்பளவில், கடலோர மாவட்டத்தின் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட துவங்கியது. 2003ல் கரும்பு பிழிவது நிறுத்தப்பட்டது. 2006ல் மூடப்பட்டது.வராஹி தண்ணீர் கிடைக்காததும், சர்க்கரை ஆலை செயல்படாமல் போனதற்கு, முக்கிய காரணம் என கூறப்படுகிறது.42 ஆண்டுகளாகியும் இதுவரை முடியவில்லை. பணிகள் தவழ்ந்து கொண்டுள்ளது. திட்டம் ஆரம்பமானபோது, 9.43 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. தற்போது 650 கோடி ரூபாயை தாண்டி செல்கிறது. ஆனால் முடியவில்லை.முதற்கட்டமாக குந்தாபுரா, உடுப்பியில் மட்டும், வராஹி திட்டம் செயல்படுத்துவதாக இருந்தது. அதன்பின் பைந்துார், பிரம்மாவராவுக்கும், திட்டம் விஸ்தரிக்கப்பட்டது.வராஹி பணிகள் முடிந்தால், உடுப்பி மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கை வளமாகும். விவசாயத்தை மையமாக கொண்ட இம்மாவட்டத்தில், விவசாயமும் செழிக்கும். கூட்டுறவு சர்க்கரை ஆலையை சீரமைத்து, திறக்க வேண்டும். வராஹி திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.விவசாயத்துறை அதிகாரி கூறியதாவது:ஆரம்பத்தில் குந்தாபுரா, உடுப்பியில் வராஹி திட்டத்தில் இருந்தன. அதன்பின் பைந்துார், பிரம்மாவரா, காபு தாலுகாக்கள் சேர்க்கப்பட்டன. திட்டம் மாறியதால். செலவும் ஏறுமுகமாக உள்ளது.மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைப்பதில் தாமதம், நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை, நிதி பற்றாக்குறை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என, பல காரணங்களால், பணிகள் தாமதமானது. தற்போது இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X