விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போலீசார் கொடி அணிவகுப்பு| Dinamalar

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போலீசார் கொடி அணிவகுப்பு

Added : செப் 01, 2022 | |
அருப்புக்கோட்டை--அருப்புக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.அருப்புக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் 9 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் இன்று வட்டார வளர்ச்சி அலுவலக பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து பெரிய கண்மாயில் கரைக்கப்பட உள்ளது.ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதம் இன்றி
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போலீசார் கொடி அணிவகுப்பு



அருப்புக்கோட்டை--அருப்புக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.அருப்புக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் 9 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் இன்று வட்டார வளர்ச்சி அலுவலக பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து பெரிய கண்மாயில் கரைக்கப்பட உள்ளது.ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதம் இன்றி பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்யும் வகையில், போலீசாரின் கொடி அணி வகுப்பு நடந்தது. நெசவாளர் காலனி இருந்து மதுரை ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட், சிவன் கோவில், அண்ணா சிலை, திருச்சுழி ரோடு, பந்தல்குடி ரோடு வழியாக போலீசார் ஊர்வலமாக சென்றனர்.மாவட்ட எஸ்பி., மனோகர் தலைமையில் அணிவகுப்பு நடந்தது. 2 டிஎஸ்பி., க்கள், 7 இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.ஐ., க்கள், 200 போலீசார்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X