விநாயகர் சதுர்த்தியில் தீ மிதித்த பக்தர்கள்

Added : செப் 01, 2022 | |
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.உப்பூர் விநாயகர் கோயிலில் விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப் பெற்றுள்ளதால் இந்த விநாயகர் வெயில் உகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். ஆண்டு தோறும் இங்கு சதுர்த்தி விழா 10
விநாயகர் சதுர்த்தியில் தீ மிதித்த பக்தர்கள்



ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.உப்பூர் விநாயகர் கோயிலில் விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப் பெற்றுள்ளதால் இந்த விநாயகர் வெயில் உகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். ஆண்டு தோறும் இங்கு சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது. விநாயகர் சதுர்த்தியான நேற்று, உப்பூர், மோர்பண்ணை கடலில் நீராடிய பக்தர்கள், காளை வாகனத்தில் வீதி உலா வந்த விநாயகருடன் ஊர்வலமாக சென்று கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர்.ஆர்.எஸ்.மங்கலம் கூ.கூ.விநாயகர் கோயிலில், மிளகாய் நவதானிய சங்க வியாபாரிகள் சார்பில் சதுர்த்தி விழா நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு விநாயகர் ஊர்வலம் நடந்தது. மேலச்செங்குடி விநாயகர் கோயிலில் அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வாணியக்குடி வீர விநாயகர் கோயிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X