கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் கண்மாய்களுக்கு நீர் நிரப்ப வழி இல்லை

Added : செப் 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வைகை அணை நிரம்பியதால் உபரிநீர், வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே பாசனத் தண்ணீர் 2000 க.அடி முதல் 3000 க.அடி வரை வந்து கொண்டிருக்கிறது. தற்சமயம் பெரிய கண்மாயில் 6 அடிக்கு மேல் (மொத்தம் 7.5அடி) தண்ணீர் உள்ளது. மடை வழியாக நகராட்சி ஊரணிகளுக்கு 20 கன அடி தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளனர். மழைநீருடன் வைகை நீர் அதிகளவில் வருவதால் இன்று(செப்.1) மாலைக்குள் பெரியகண்மாய் நிரம்பி
கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் கண்மாய்களுக்கு நீர் நிரப்ப  வழி இல்லை

வைகை அணை நிரம்பியதால் உபரிநீர், வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே பாசனத் தண்ணீர் 2000 க.அடி முதல் 3000 க.அடி வரை வந்து கொண்டிருக்கிறது. தற்சமயம் பெரிய கண்மாயில் 6 அடிக்கு மேல் (மொத்தம் 7.5அடி) தண்ணீர் உள்ளது. மடை வழியாக நகராட்சி ஊரணிகளுக்கு 20 கன அடி தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மழைநீருடன் வைகை நீர் அதிகளவில் வருவதால் இன்று(செப்.1) மாலைக்குள் பெரியகண்மாய் நிரம்பி விடும். உபரிநீரை சக்கரகோட்டை கண்மாய்க்கு கொண்டு செல்ல வாய்க்கால், தடுப்பணைகள் புத்தேந்தல் பகுதிகளில் சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வாண்டு முன்கூட்டியே பெரியகண்மாய் நிரம்பினாலும், வழக்கம் போல பல ஆயிரம் கன அடி வைகை தண்ணீர் கடலில் வீணாகும் என விவசாயிகள் கூறினர்.ராமநாதபுரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பெரிய கண்மாயில் 6.5 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க முடியாது. சக்கரகோட்டை கண்மாய் வழித்தடத்தில் தடுப்பனை சேதத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நகரில் உள்ள அனைத்து ஊரணிகளுக்கும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும். இதற்காக ஊரணி வரத்துவாய்க்கால்களை துார்வாரி தயார் செய்ய கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.மழை நீருடன் பெரிய கண்மாய்க்கு 4000 கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதால் வைகையாற்று கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுஉள்ளது, என்றார்.ராமநாதபுரம், செப்.1-

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் வைகை அணை நீரால் 6 அடிக்கு மேல் (மொத்தம் 7.5அடி) தண்ணீர் உள்ள நிலையில் ராமநாதபுரம் நகரில் சில ஊரணிகளுக்கு தற்போது வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது மழை நீருடன் வைகை அணை நீரும் சேர்ந்து 4000 கன அடிக்கு மேல் வருவதால் சக்கரக்கோட்டை, களரி உள்ளிட்ட கண்மாய்களுக்கு நீர் நிரப்ப கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் சிக்கல் ஏற்பட்டு கடலில் தண்ணீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
01-செப்-202207:36:26 IST Report Abuse
duruvasar பொலம்புங்க. இன்னும் இன்னும் 3 வருசம் 9 மாதத்திற்கு இந்த ஒப்பாரி தான் வைத்தாகவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X