விநாயகர் சதுர்த்தி வழிபாடு

Added : செப் 01, 2022 | |
Advertisement
கடலுார் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பாதிரிபுலியூர் வேதவிநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடலுாரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் கோவில்களில் காலை முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததால், கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டன. திருப்பாதிரிபுலியூர் லாரன்ஸ் ரோடு வேதவிநாயகர் கோவிலில்
விநாயகர் சதுர்த்தி வழிபாடு


கடலுார் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பாதிரிபுலியூர் வேதவிநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடலுாரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் கோவில்களில் காலை முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததால், கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டன. திருப்பாதிரிபுலியூர் லாரன்ஸ் ரோடு வேதவிநாயகர் கோவிலில் சதுர்த்தி சிறப்பு ேஹாமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து வேதவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.அதேப்போல், புதுப்பாளையம் இரட்டை விநாயகர், மஞ்சக்குப்பம் மகா விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.

இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தன. கொேரானா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின், பெரிய அளவிலான சிலை பிரதிஷ்டை செய்து இளைஞர்கள் ஆர்வத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X