மானாமதுரையில் 2 வருடத்திற்கு பின் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம்

Added : செப் 01, 2022 | |
Advertisement
மானாமதுரை--களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளுக்கு புகழ்பெற்ற மானாமதுரையில் 2 வருடங்களுக்குப்பிறகு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது.மண்பாண்ட பொருட்களுக்கு புகழ்பெற்ற மானாமதுரையில் சுற்றுபுறச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்படும் களிமண்ணால் ஆன விநாயகர்சிலைகளை தமிழகம் முழுவதும் இருந்தும் வாங்கிச் சென்று மக்கள் வழிபட்டு வருகின்றனர்.இரண்டு
மானாமதுரையில் 2 வருடத்திற்கு பின் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம்



மானாமதுரை--களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளுக்கு புகழ்பெற்ற மானாமதுரையில் 2 வருடங்களுக்குப்பிறகு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது.மண்பாண்ட பொருட்களுக்கு புகழ்பெற்ற மானாமதுரையில் சுற்றுபுறச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்படும் களிமண்ணால் ஆன விநாயகர்சிலைகளை தமிழகம் முழுவதும் இருந்தும் வாங்கிச் சென்று மக்கள் வழிபட்டு வருகின்றனர்.இரண்டு வருடமாக கொரோனா தொற்று காரணமாக விநாயகர்சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவில்லை. இந்த வருடம் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும்,ஊர்வலம் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபடக்கூடிய பெரிய சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்டனர்.மானாமதுரையில் பழைய தபால் ஆபீஸ் தெரு, சங்கு விநாயகர் கோயில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, செக்கடி, புரட்சியார்பேட்டை, ரயில்வே காலனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X