விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்; சிவகங்கையில் 389 சிலைகள் தயார்

Added : செப் 01, 2022 | |
Advertisement
சிவகங்கை-சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 381 இடங்களில் 389 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடு நடந்தது. பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி சிலைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுஇருந்தன. காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் 5 முதல் 13



சிவகங்கை-சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 381 இடங்களில் 389 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடு நடந்தது. பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி சிலைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுஇருந்தன. காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் 5 முதல் 13 அடி உயரத்தில் விநாயகர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. 381 இடங்களில் 389 சிலைகள் பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அந்தந்த குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன.சிவகங்கையில் செப்., 4ல் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படவுள்ளன. இது தவிர வீடுகளில் அரை அடிமுதல் 2அடி வரையுள்ள விநாயகர் சிலைகள் வைத்து பழங்கள், பொரி, கடலை, சுண்டல், கொலுக்கட்டை படையல் செய்து விநாயகரை பக்தர்கள் வணங்கினர். இந்த சிலைகளை நீர் நிலைகளில் நாளை முதல் விஜர்சனம் செய்ய உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X