சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Added : செப் 01, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : திட்டக்குடி அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி, காளியாமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகாந்த், 30. இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் நேற்று காலை அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.இதுகுறித்து, மாவட்ட சமூக நலத்துறைக்கு புகார் சென்றது. மாவட்ட சைல்டு லைன் ஆலோசகர்



விருத்தாசலம் : திட்டக்குடி அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி, காளியாமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகாந்த், 30. இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் நேற்று காலை அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.இதுகுறித்து, மாவட்ட சமூக நலத்துறைக்கு புகார் சென்றது.

மாவட்ட சைல்டு லைன் ஆலோசகர் பார்த்தீபராஜ், திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார், சிறுமி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.அதில், 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. சிறுமி மீட்கப்பட்டு, கடலுார் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X