ஆந்திராவில் மழை பெய்வதால் திருவள்ளூரில்...மகிழ்ச்சி! : தமிழக ஆறுகளில் கரைபுரண்டு வரும் தண்ணீர்; நீர்மட்டம் உயர்வதால் பயிர்கள் விளைச்சல் உறுதி

Added : செப் 01, 2022 | |
Advertisement
ஆர்.கே.பேட்டை:தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆந்திர மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மலைப்பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தமிழகத்தில் உள்ள சிற்றாறுகளில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆற்றின் கரையோர ஏரிகள் நிரம்புவதால், ஆடி பட்டத்தில் விதைத்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி
ஆந்திராவில் மழை பெய்வதால் திருவள்ளூரில்...மகிழ்ச்சி! : தமிழக ஆறுகளில் கரைபுரண்டு வரும் தண்ணீர்; நீர்மட்டம் உயர்வதால் பயிர்கள் விளைச்சல் உறுதி

ஆர்.கே.பேட்டை:தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆந்திர மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மலைப்பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தமிழகத்தில் உள்ள சிற்றாறுகளில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆற்றின் கரையோர ஏரிகள் நிரம்புவதால், ஆடி பட்டத்தில் விதைத்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு, நந்தியாறு மற்றும் கூவம்
ஆறுகள் ஆகியவை பிரதானமாக விளங்குகின்றன. கொசஸ்தலை ஆறு மற்றும் நந்தியாறு,
ஆந்திர மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில், ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு
ஒன்றியங்கள் அமைந்துள்ளன. இந்த ஒன்றியங்களின் மேற்கு எல்லை, ஆந்திர மாநிலம்,
சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட புல்லுார் காப்புக்காட்டை ஒட்டியுள்ளது. புல்லுார் காப்புக்காடு. 30 கி.மீ., துாரத்திற்கும் மேற்பட்ட மலைத்தொடர் பகுதி. இந்த மலைப்பகுதி சிறந்த நீர்பிடிப்பு
பிரதேசம்.

சித்துார் மாவட்டம், அய்யன்கண்டிகை மலைப்பகுதியில் இருந்து உருவாகும், நந்தியாறு, ஆர்.கே.பேட்டை ஒன்றியம், தேவலாம்பாபுரம் வழியாக பாய்கிறது.இது, நேசனுார் ஓடையில் கலந்து, ஞானகொல்லி தோப்பு, வெங்குபட்டு, செருக்கனுார், கோரமங்கலம் வழியாக
திருத்தணியை கடந்து சென்று, லட்சுமாபுரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

அதே போல், பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆற்றின் மூல நதிகளாக
விளங்கும் லவா, குசா ஆறுகளும், ஆந்திர மாநில நீர்பிடிப்பை நம்பியே அமைந்துள்ளன.லவா ஆற்றுக்கு புல்லுார் காப்புக்காட்டில் இருந்து உருவாகும் ஓடைகள் வாயிலாக தண்ணீர்
வருகிறது. குசா ஆற்றுக்கு, ஆந்திர மாநிலம், கார்வேட்நகரம், கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடந்த ஆண்டு, கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து கிடைத்த தண்ணீரை விட, லவா ஆறு வாயிலாக கிடைத்த தண்ணீரே அதிகம்.தற்போது, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தின் மேற்கு
பகுதியில் உள்ள தேவலாம்பாபுரம் பகுதிக்கு, ஆந்திர மாநிலத்தில் இருந்து, அய்யன்கண்டிகை சிற்றாறு வாயிலாகவும் நீர்வரத்து உள்ளது. இதன் வாயிலாக, நாகபூண்டி ஏரி நிரம்பி வருகிறது.
நாகபூண்டி ஏரியின் மதகு வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தின் பல்வேறு ஏரிகளுக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது.

அம்மலேரி ஏரியில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.ஆடி பட்டத்தில் விதைத்துள்ள
விவசாயிகள், பாசனத்தை தடையின்றி மேற்கொள்ள முடியும் என்பதால், மகிழ்ச்சியில்
உள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட நீர்பிடிப்பு பகுதியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழைகாரணமாக, தமிழக பகுதிக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. அய்யன்கண்டிகை சிற்றாறில் பாய்ந்து வரும் வெள்ளம் காரணமாக, நாகபூண்டி ஏரி நேற்று முழுதுமாக நிரம்பியுள்ளது. உபரி நீர், கலங்கல் வாயிலாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நிலைமையை பொதுப்பணித்
துறையினர் கூர்ந்து கவனித்து வருகின்றனர். தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயார் நிலையில் உள்ளனர்.

- -ஏ.எம்.சுந்தரம், பொதுபணி துறை

இளநிலை பொறியாளர், ஆர்.கே.பேட்டை
.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X