திருப்புத்துாரில் தொடரும் மழை ஆறுகளில் நீர் வரத்து துவங்கியது

Added : செப் 01, 2022 | |
Advertisement
திருப்புத்துார்--திருப்புத்தூர் ஆறுகளில் தொடர் மழையால் நீர் வரத்து காணப்பட்டது.திருப்புத்தூர் வழியாக மணிமுத்தாறு, பாலாறு, விருசுழியாறு செல்கிறது. மதுரை மேலூர் வழியாக செல்லும் உப்பாற்று உபரி நீர் மணிமுத்தாறுக்கு வரும். திண்டுக்கல் கரந்தமலை நீரும் பாலாற்றிற்கு வரும். புதுக்கோட்டை பொன்னமராவதி பகுதியிலிருந்து விருசுழியாற்றிலும் நீர்வரத்து ஏற்படும். இதுவரை
திருப்புத்துாரில் தொடரும் மழை ஆறுகளில் நீர் வரத்து துவங்கியது



திருப்புத்துார்--திருப்புத்தூர் ஆறுகளில் தொடர் மழையால் நீர் வரத்து காணப்பட்டது.திருப்புத்தூர் வழியாக மணிமுத்தாறு, பாலாறு, விருசுழியாறு செல்கிறது. மதுரை மேலூர் வழியாக செல்லும் உப்பாற்று உபரி நீர் மணிமுத்தாறுக்கு வரும். திண்டுக்கல் கரந்தமலை நீரும் பாலாற்றிற்கு வரும். புதுக்கோட்டை பொன்னமராவதி பகுதியிலிருந்து விருசுழியாற்றிலும் நீர்வரத்து ஏற்படும். இதுவரை இவ்வாறு ஆறுகளில் நீர்வரத்து ஏற்படவில்லை.ஆனால் திருப்புத்தூர் வட்டாரத்தில் கடந்த ஆக. 19 முதல் நல்ல மழை பெய்து வருகிறது. ஆக.19 ல் 42 மி.மீ., ஆக 22ல் 26 மி.மீ, ஆக.26ல் 55 மி.மீ., ஆக.27 ல் 85 மி.மீ. ஆக.29 ல் 22 மிமி, ஆக.30ல் 95.04 மி.மீ. என்று பெய்வதால் வயல்களில் மழை நீர் தேங்கி வடியத்துவங்கியுள்ளது. கண்மாய்களிலும் நீர் தேங்கி உயரத் துவங்கியுள்ளது. இதனால் ஆறுகளில் ஆங்காங்கே நீர் வரத்து காணப்பட்டது. பல பகுதிகளில் மக்கள் உற்சாகமாக மீன் பிடிப்பதை பார்க்க முடிந்தது. மேலும் அருகிலுள்ள மாவட்டங்களில் மழை தொடர்ந்தால்ஆற்றில் நீர் வரத்து தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X