விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்| Dinamalar

விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்

Added : செப் 01, 2022 | |
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம், கடைவீதி வெற்றி விநாயகர் கோவிலில் 29ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா தொடங்கியது.இதையொட்டி, நேற்று காலை கணபதி ஹோமம், மஹா கணபதி பிரதிஷ்டை செய்து சிறப்பு அபிேஷக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று 1ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை அன்னதானம், ஆன்மிக பட்டிமன்றம் நடக்கிறது.நாளை 2ம் தேதி சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், அன்னதானம்
விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்



மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம், கடைவீதி வெற்றி விநாயகர் கோவிலில் 29ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா தொடங்கியது.இதையொட்டி, நேற்று காலை கணபதி ஹோமம், மஹா கணபதி பிரதிஷ்டை செய்து சிறப்பு அபிேஷக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று 1ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை அன்னதானம், ஆன்மிக பட்டிமன்றம் நடக்கிறது.நாளை 2ம் தேதி சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், அன்னதானம் மற்றும் திருவிளக்கு பூஜை நடக்கிறது.

வரும் 3ம் தேதி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், இன்னிசை கச்சேரி நடக்கிறது. வரும் 4ம் தேதி 1,008 கொழுக்கட்டையுடன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலை 6:00 மணியளவில் மலர் அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து வடக்குவெள்ளுர் காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. ஏற்பாடுகளை இந்து முன்னணியினர் மற்றும் வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். திருவள்ளுவர் நகர சித்தி விநாயகர் கோவிலில் 46ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X