குறைகளை கூறுவோம் தீர்வு காண்போம்...

Added : செப் 01, 2022 | |
Advertisement
தாழ்வாக தொங்கும் வயர்கள்நத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலை ஒத்தக்கடை பகுதியில் மின்வயர்கள் தாழ்வாக தொங்குகின்றன.எஸ்.சுந்தரபாண்டி, ஒத்தக்கடைநடவடிக்கை எடுக்கப்படும்தாழ்வாக தொங்கும் மின்வயர்கள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.வெங்கடேஸ்வரன், உதவி செயற்பொறியாளர். நத்தம்பழுதான ரோடுகாணப்பாடி கால்நடை மருந்தகத்திற்கு செல்லும் ரோடு சேதமுற்று உள்ளதால் பயணத்திற்கு

தாழ்வாக தொங்கும் வயர்கள்

நத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலை ஒத்தக்கடை பகுதியில் மின்வயர்கள் தாழ்வாக தொங்குகின்றன.எஸ்.சுந்தரபாண்டி, ஒத்தக்கடை

நடவடிக்கை எடுக்கப்படும்
தாழ்வாக தொங்கும் மின்வயர்கள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.வெங்கடேஸ்வரன், உதவி செயற்பொறியாளர். நத்தம்

பழுதான ரோடு
காணப்பாடி கால்நடை மருந்தகத்திற்கு செல்லும் ரோடு சேதமுற்று உள்ளதால் பயணத்திற்கு சிரமமாக உள்ளது.வீரப்பன், காணப்பாடி

பரிந்துரை செய்யப்படும்
வடமதுரை ஒன்றிய நிர்வாகத்திடம் ரோடு அமைக்க பரிந்துரை செய்யப்படும்.ஆர்.மோகன், ஒன்றிய கவுன்சிலர், காணப்பாடி.

கூடுதல் தெருவிளக்கு
சின்னாளபட்டி பஸ் ஸ்டாப்பில் போதிய விளக்கு வசதியில்லை.இதை ஏற்படுத்த வேண்டும் டி.பாலகுமார், சின்னாளபட்டி.

நடவடிக்கை உண்டு
பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு திட்டத்தில் கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்கப்படும்.நந்தகுமார், பேரூராட்சி செயல் அலுவலர், சின்னாளபட்டி.

குடிநீர் வசதி
வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டிற்குள் குடிநீர் வசதியின்றி பயணிகள் சிரமப்படுகின்றனர்.எஸ்.கார்த்திகேயன், வத்தலக்குண்டு.

உடனடி நடவடிக்கை
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,ப.சிதம்பரம், தலைவர், வத்தலக்குண்டு பேரூராட்சி

கழிவுநீர் தேக்கம்
வேடசந்தூர் நேருஜி நகர் சாக்கடையில் கழிவு நீர் வெளியேற வழியில்லாததால் தேங்கி நிற்கிறது.ஆர்.கருப்புச்சாமி, வேடசந்துார்

தீர்வு காணப்படும்
கழிவுநீர் வெளியேற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்மேகலா, தலைவர், வேடசந்துார் பேரூராட்சி

தேங்கும் குப்பை
ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாசில் குப்பையை அகற்ற தாமதப்படுத்துவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.கந்தசாமி, ஒட்டன்சத்திரம்

நடவடிக்கை எடுக்கப்படும்
ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் அவ்வப்போது குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.திருமலைசாமி, தலைவர், ஒட்டன்சத்திரம் நகராட்சி

குப்பையால் சுகாதாரக்கேடு
காமனுார் ஊராட்சி மங்கலம்கொம்பு நுழைவாயிலில் குப்பை குவிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.சிவா, மங்கலம்கொம்பு

நடவடிக்கை எடுக்கப்படும்
நுழைவு வாயிலில் உள்ள குப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.மணிரஞ்சிதம், தலைவர், காமனுார்.

மெயின் ரோட்டில் கழிவுநீர்
வேடசந்துார் ஆத்துமேடு - திண்டுக்கல் ரோடு, ஆத்துமேடு - கரூர் ரோட்டில், டீக்கடை கழிவு நீரை ரோட்டில் ஊற்றுவதால் ரோடு சேதம் ஆவதுடன் டூவீலர் ஓட்டிகளும் பாதிக்கின்றனர்.இளமுருகு, வேடசந்துார்.

நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
உடனடியாக பார்த்து ரோட்டில் ஊற்றாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கார்த்திகேயன், பேரூராட்சி கவுன்சிலர்,வேடசந்துார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X