தேனி மருத்துவக் கல்லூரி வார்டில் டைல்ஸ் பெயர்ந்ததால் அச்சம்

Added : செப் 01, 2022 | |
Advertisement
ஆண்டிபட்டி--தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வார்டில் தரையில் இருந்த டைல்ஸ் கற்கள் திடீரென உடைந்ததால் நோயாளிகள் வெளியேறினர். இங்கு அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் 2ம் தளத்தில் உள்ள 704வது வார்டில் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கியுள்ளனர். இந்த வார்டின் தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் திடீரென ஒவ்வொன்றாக வெடித்து 50க்கும் மேற்பட்ட கற்கள்



ஆண்டிபட்டி--தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வார்டில் தரையில் இருந்த டைல்ஸ் கற்கள் திடீரென உடைந்ததால் நோயாளிகள் வெளியேறினர். இங்கு அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் 2ம் தளத்தில் உள்ள 704வது வார்டில் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கியுள்ளனர். இந்த வார்டின் தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் திடீரென ஒவ்வொன்றாக வெடித்து 50க்கும் மேற்பட்ட கற்கள் பெயர்ந்தது. இதனை கண்ட நோயாளிகள் அச்சமடைந்து வார்டை விட்டு வெளியேறினர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சோதனை செய்தனர். பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்களுக்குள் நீர், காற்று புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறினர். டீன் பாலாஜிநாதன் கூறியதாவது: 14 ஆண்டுகளுக்கு முன் பதித்த டைல்ஸ் கற்களின் இடைவெளியில் நீர், காற்று புகுந்துள்ளது. அதில் நடந்து அழுத்தம் கொடுத்ததால் அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டுள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லை. சேதமடைந்த கற்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பொதுப்பணி துறை மூலம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X