தாமரைக்குளம் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Added : செப் 01, 2022 | |
Advertisement
பெரியகுளம்-தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டத்தில் வார்டில் வளர்ச்சி பணிகள் நடைபெறாததை கண்டித்து ஆறு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பால்பாண்டியன் (தி.மு.க.) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மலர்கொடி, செயல் அலுவலர் ஆளவந்தார் முன்னிலை வகித்தனர். மைதிலி: வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு பலமுறை



பெரியகுளம்-தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டத்தில் வார்டில் வளர்ச்சி பணிகள் நடைபெறாததை கண்டித்து ஆறு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பால்பாண்டியன் (தி.மு.க.) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மலர்கொடி, செயல் அலுவலர் ஆளவந்தார் முன்னிலை வகித்தனர். மைதிலி: வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு பலமுறை வலியுறுத்தியும் பணிகள் தாமதமாகிறது. கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் குறித்தும் அந்தப் பணிகள் விரைவில் செய்து வர வலியுறுத்தினர். இக் கோரிக்கையை வலியுறுத்தி கவுன்சிலர்கள் மைதிலி, ஜாகிர் உசேன், வசந்தா, முருகன், செல்லாரம், பாண்டி ஆகிய 6 கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.அவர்கள் கூறுகையில், வார்டுகளில் எந்த பணியும் நடைபெறவில்லை. தன்னிச்சையாக நிர்வாகத்தினர் செயல்படுகின்றனர்.எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிப்பதில்லை. இதனால் வெளிநடப்பில் ஈடுபடுகிறோம் என்றனர்.வார்டு 7, 10, 13, 15 ஆகிய பகுதிகளில் சிறுபாலம்,வடிகால் வசதி சீரமைப்பு உட்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X