நிலச்சரிவு, விபத்து மீட்பு பணி குறித்து இன்று ஒத்திகை

Added : செப் 01, 2022 | |
Advertisement
கூடலுார்--மழைக்காலங்களில் ஏற்படும் நிலச்சரிவு, விபத்துகளில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி இன்று (செப்.1) குமுளி மலைப்பாதையில் நடைபெறுகிறது. தென்மேற்கு பருவமழையால் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளது. அக்., நவ.,ல் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். இந்த
 நிலச்சரிவு, விபத்து மீட்பு பணி குறித்து இன்று ஒத்திகை

கூடலுார்--மழைக்காலங்களில் ஏற்படும் நிலச்சரிவு, விபத்துகளில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி இன்று (செப்.1) குமுளி மலைப்பாதையில் நடைபெறுகிறது.

தென்மேற்கு பருவமழையால் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளது. அக்., நவ.,ல் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். இந்த நேரத்தில் தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் நிலச்சரிவு, விபத்துக்கள் நடக்கும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளுக்கு அனைத்து துறை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இதற்காக குமுளி மலைப்பாதையில் இன்று நிலச்சரிவு ஏற்படுவது போலவும், பஸ் விபத்தில் சிக்குவது போலவும், அதிலிருந்து மீட்கப்படுவது குறித்தும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதற்காக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கவுசல்யா தலைமையில் நடந்தது. தாசில்தார் அர்ஜுனன், வட்டார மருத்துவ அலுவலர் முருகன், ரேஞ்சர் அன்பு, எஸ்.ஐ., அல்போன்ஸ், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X