கம்பமெட்டு ரோடை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்த ஏல விவசாயிகள் வலியுறுத்தல்

Added : செப் 01, 2022 | |
Advertisement
கம்பம்--தமிழகம், கேரளா இணைப்பு ரோடான கம்பமெட்டு ரோட்டை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி பராமரிக்க ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவை இணைக்க போடிமெட்டு, கம்பமெட்டு, குமுளி மலைப்பாதைகள் உள்ளன. சபரிமலை, முல்லைப்பெரியாறு அணை, கொச்சின் துறைமுகம் போன்ற இடங்களுக்கு செல்ல குமுளி, கம்பமெட்டு ரோடு பயன்படுகிறது. கம்பத்திலிருந்து
கம்பமெட்டு ரோடை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்த ஏல விவசாயிகள் வலியுறுத்தல்

கம்பம்--தமிழகம், கேரளா இணைப்பு ரோடான கம்பமெட்டு ரோட்டை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி பராமரிக்க ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவை இணைக்க போடிமெட்டு, கம்பமெட்டு, குமுளி மலைப்பாதைகள் உள்ளன. சபரிமலை, முல்லைப்பெரியாறு அணை, கொச்சின் துறைமுகம் போன்ற இடங்களுக்கு செல்ல குமுளி, கம்பமெட்டு ரோடு பயன்படுகிறது. கம்பத்திலிருந்து கேரளாவிற்குள் செல்ல குமுளி வழியாக 20 கி.மீ, தூரமும், கம்பமெட்டு வழியாக செல்ல 13 கி.மீ. தூரமும் பயணம் செய்ய வேண்டும். சமீபமாக சபரிமலை சீசனில் பக்தர்கள் கம்பமெட்டு ரோடு வழியாக திருப்பி விடுகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் ஏலத் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர். போடிமெட்டு மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டால், மூணாறு செல்ல சுற்றுலா பயணிகள் கம்பமெட்டு ரோட்டில் செல்ல வேண்டியுள்ளது. குறுகிய நேரத்தில் கேரளா செல்ல பயன்படும் இந்த ரோட்டை மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிக்கிறது. குமுளி, போடி மெட்டு ரோடுகள் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் உள்ளது. இதே போல் கம்பம் மெட்டு ரோட்டை தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கையாக உள்ளது.
ரோடு அகலப்படுத்தவேண்டும்
ஒ.ஆர். நாராயணன், கம்பம் விவசாயிகள் சங்க தலைவர்: கம்பமெட்டு மலைப்பாதையில் 13 கேர் பின் வளைவுகளில் அகலம் 5 மீட்டராக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த ரோட்டை கையகப்படுத்தி 10 மீட்டராக அகலப்படுத்த வேண்டும். இரு வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்லவும், எதிரே வரும் வாகனங்கள் சிரமமின்றி செல்லும் வகையில் மாற்ற வேண்டும். கேர் பின் வளைவுகளில் அகலத்தை அதிகரிக்க வேண்டும்.குமணன், உதவி செயற் பொறியாளர், நெடுஞ் சாலைத் துறை: 3.75 மீட்டர் அகலம் இருந்ததை 2004ல் 5.5 மீட்டராகவும், 2014 ல் 7 மீட்டராகவும் அகலப்படுத்தியுள்ளோம். வளைவுகளை அகலப்படுத்த வனத்துறை அனுமதி இல்லை.

அனுமதித்தால் மாநில நெடுஞ்சாலைத் துறையே 10 மீட்டராக அகலப்படுத்தும்" சென்றார்.ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இந்த ரோடு முறைப்படி நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கவில்லை. வனத்துறையிடம் உள்ளது. முதலில் வனத்துறை ரோட்டை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி, திண்டுக்கல் கொட்டாரக்கரா எண் 183ன் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X