பள்ளி, கல்லுாரி செய்திகள்... | Dinamalar

பள்ளி, கல்லுாரி செய்திகள்...

Added : செப் 01, 2022 | |
கம்பராமாயண சொற்பொழிவுமதுரை: மதுரைக்கல்லுாரியில் தமிழ்த்துறை, மதுரை கம்பன் கழகம் சார்பில் கம்பராமாயண சொற்பொழிவு நடந்தது. கல்லுாரி வாரிய துணைத்தலைவர் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தார். செயலர் நடனகோபால் முன்னிலை வகித்தார். முதல்வர் சுரேஷ், வாரிய பொருளாளர் ஆனந்த் சீனிவாசன், தமிழ்த்துறை தலைவர் தனசாமி பங்கேற்றனர். திருச்சி ரா.மாது பேசுகையில், ''இளைஞர்கள் ராமரின்



கம்பராமாயண சொற்பொழிவு

மதுரை: மதுரைக்கல்லுாரியில் தமிழ்த்துறை, மதுரை கம்பன் கழகம் சார்பில் கம்பராமாயண சொற்பொழிவு நடந்தது. கல்லுாரி வாரிய துணைத்தலைவர் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தார். செயலர் நடனகோபால் முன்னிலை வகித்தார். முதல்வர் சுரேஷ், வாரிய பொருளாளர் ஆனந்த் சீனிவாசன், தமிழ்த்துறை தலைவர் தனசாமி பங்கேற்றனர். திருச்சி ரா.மாது பேசுகையில், ''இளைஞர்கள் ராமரின் சகோதர பாசத்தை போல சகோதரத்துவத்துடன் பழக வேண்டும். ஒருபோதும் தன் அழகையோ, உயரத்தையோ பிறரோடு ஒப்பிடக்கூடாது. தன் திறனை வளர்த்துக்கொள்ளும் பாதையை நோக்கி பயணிக்க வேண்டும். பிறருக்கு துன்பம் தரும் செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது'' என்றார்.

விளையாட்டு விழா
மதுரை: அண்ணாநகர் ஒய்.டபிள்யூ.சி.ஏ., நர்சரி, பிரைமரி பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. தாளாளர் நிர்மலா சந்தோஷம் கொடியேற்றி துவக்கி வைத்தார். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தலைமை ஆசிரியை மெர்சி வரவேற்றார். மாணவர்கள் கராத்தே, பிரமிட், யோகா போன்ற பல்வேறு சாதனைகளை செய்து காட்டினர்.

பட்டமளிப்பு விழா
மதுரை: மீனாட்சி இணை மருத்துவ அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.முதல்வர் ஜோதி முனியாண்டி வரவேற்றார். நரம்பியல் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் ரமேஷ் அர்த்தநாரி, மருத்துவ நிர்வாகி கண்ணன், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தலைவர்கள் தினகரன் டேனியல், நரேந்திரநாத் ஜனா, ஆய்வக துறைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டனர்.

--கண்தான விழிப்புணர்வு
மதுரை: ஆஸ்டின்பட்டி சிவானந்தா வித்யாலயா பள்ளியில் சக்ஷம் மற்றும் ராம்கோ சமூக சேவை கழகம் இணைந்து இருவார கண்தான விழிப்புணர்வு வாகன ஊர்வலத்தை நடத்தின. சுவாமி ராமானந்த மகாராஜ் துவக்கி வைத்தார். சக்ஷம் அமைப்பின் தேசிய துணைத் தலைவர் காமாட்சி, மாநில மகிளா பிரமுக் கவிதா, மாநில துணைச்செயலாளர் முத்துமணிகண்டன், பள்ளி முதல்வர் கண்ணன் பங்கேற்றனர். மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை வாகன ஊர்வலம் செல்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X