எல்லீஸ் அணைக்கட்டு அருகே கரை அரிப்பு7 கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம்| Dinamalar

எல்லீஸ் அணைக்கட்டு அருகே கரை அரிப்பு7 கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம்

Added : செப் 01, 2022 | |
திருவெண்ணெய்நல்லுார்-சாத்துார் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் எல்லீஸ் அணைக்கட்டு அருகே கரையில் அரிப்பு ஏற்பட்டு ஓரு ஏக்கர் அளவிற்கு விவசாய நிலம் மாயமாகி உள்ளது. ஏழுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின்
எல்லீஸ் அணைக்கட்டு அருகே கரை அரிப்பு7 கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம்

திருவெண்ணெய்நல்லுார்-சாத்துார் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் எல்லீஸ் அணைக்கட்டு அருகே கரையில் அரிப்பு ஏற்பட்டு ஓரு ஏக்கர் அளவிற்கு விவசாய நிலம் மாயமாகி உள்ளது. ஏழுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 1950ம் ஆண்டு எல்லீஸ் அணைக்கட்டு கட்டப்பட்டது. அணைக்கட்டின் வலது மற்றும் இடது புறம் தலா 4 ஷெட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது.இந்த அணைக்கட்டு மூலம் 20,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. பல்வேறு கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வந்தது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி அணைக்கட்டின் வலது புறம் உள்ள ஷெட்டர்கள் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தன. தொடர்ந்து ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கடந்தாண்டு நவம்பர் 19ம் தேதி சேதமடைந்திருந்த 2 ஷெட்டர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் , சாத்தனுார் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சாத்தனுார் அணையிலிருந்து கூடுதலாக 15 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் எல்லீஸ் அணைக்கட்டு பகுதி கரைகளில் தண்ணீர் வேகமாக வந்து மோதியதால் அப்பகுதியில் கரையில் அரிப்பு ஏற்பட்டது.இதனால் கரை பகுதியில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும் அருகே உள்ள ஏனாதிமங்கலம், எரளூர், செம்மார், கரடிப்பாக்கம், மேலமங்கலம் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X