கள்ளக்குறிச்சி மரசிற்பங்களுக்கு டில்லி கண்காட்சியில் சிறப்பு பரிசு

Added : செப் 01, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-புதுடில்லியில் நடந்த மத்திய அரசின் இந்திய அளவிலான புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சியில் கள்ளக்குறிச்சி மரசிற்ப கைவினை பொருட்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.மத்திய அரசின் கைவினை பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் சார்பில் புதுடில்லி நொய்டா இந்தியா எக்ஸ்போ சென்டர் மார்ட்டில் இந்திய அளவிலான புவிசார் குறியீடு பெற்ற கைவினை
கள்ளக்குறிச்சி மரசிற்பங்களுக்கு டில்லி கண்காட்சியில் சிறப்பு பரிசு



கள்ளக்குறிச்சி-புதுடில்லியில் நடந்த மத்திய அரசின் இந்திய அளவிலான புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சியில் கள்ளக்குறிச்சி மரசிற்ப கைவினை பொருட்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.மத்திய அரசின் கைவினை பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் சார்பில் புதுடில்லி நொய்டா இந்தியா எக்ஸ்போ சென்டர் மார்ட்டில் இந்திய அளவிலான புவிசார் குறியீடு பெற்ற கைவினை பொருட்களின் கண்காட்சி நடந்தது. புதுச்சேரி கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் மூலமாக அனுமதி பெற்று, கள்ளக்குறிச்சி மரசிற்ப கைவினைஞர் சங்க நிர்வாகி சக்திவேல், புதுடில்லியில் நடந்த கண்காட்சியில் பங்கேற்று புவிசார் குறியீடுகள் பெற்ற பல்வேறு மர சிற்பங்களை காட்சிப்படுத்தி, மர சிற்ப செய்முறையினை செய்து காண்பித்தார்.இதன்மூலமாக ஏற்றுமதியாளர்களினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுடன், கள்ளக்குறிச்சியில் உருவாகும் மரசிற்பங்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மரசிற்பங்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X