கொரோனாவிற்கு முதியவர் பலி

Added : செப் 01, 2022 | |
Advertisement
புதுச்சேரி,-புதுச்சேரிமாநிலத்தில் கடந்த 30ம் தேதி 322 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு இருந்தனர். அவர்களில் 33 பேர் நேற்று முன் தினம் குணமடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 904 பேருக்கு பரிசோதனை செய்ததில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் தற்போது 340 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 9 பேர் மருத்துவமனையிலும், 330 பேர் வீட்டு



புதுச்சேரி,-புதுச்சேரிமாநிலத்தில் கடந்த 30ம் தேதி 322 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு இருந்தனர். அவர்களில் 33 பேர் நேற்று முன் தினம் குணமடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 904 பேருக்கு பரிசோதனை செய்ததில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் தற்போது 340 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 9 பேர் மருத்துவமனையிலும், 330 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று சதவீதம் 5.75 ஆக உள்ளது. மாநிலத்தில் நேற்று முன்தினம் 8,235 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தொற்று பாதித்த புதுச்சேரி வெங்கட்டா நகரை சேர்ந்த 91 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 1,969 ஆக உயர்ந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X