சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கை: சர்வதேச அமைப்பில் தாக்கல்

Updated : செப் 01, 2022 | Added : செப் 01, 2022 | |
Advertisement
புதுடில்லி-பருவநிலை மாறுபாடு பிரச்னையை சமாளிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட தேசிய பங்களிப்பு திட்டத்தை, ஐ.நா., பருவநிலை மாறுபாடு அமைப்பிடம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான பாரிஸ் ஒப்பந்தத்தில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.உலக நாடுகள்இதன்படி, 2030ம் ஆண்டுக்குள் தட்ப வெப்பநிலையை, 1.5

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-பருவநிலை மாறுபாடு பிரச்னையை சமாளிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட தேசிய பங்களிப்பு திட்டத்தை, ஐ.நா., பருவநிலை மாறுபாடு அமைப்பிடம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான பாரிஸ் ஒப்பந்தத்தில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.



latest tamil news




உலக நாடுகள்

இதன்படி, 2030ம் ஆண்டுக்குள் தட்ப வெப்பநிலையை, 1.5 டிகிரி செல்ஷியஸ் குறைக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதற்காக, அதிகளவில் கரியமில வாயு வெளியேறுவதை தடுப்பது, மாசு ஏற்படுத்தாத மின்சக்திக்கு மாறுவது போன்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும்.இதையடுத்து ஒவ்வொரு நாடும், நிர்ணயிக்கப்பட்ட தேசிய பங்களிப்பு திட்டத்தை உருவாக்கி உள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் கடந்தாண்டு இறுதியில் நடந்த சர்வதேச மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, 'பஞ்சமிர்தம்' எனப்படும் ஐந்து முக்கிய திட்டங்களை அவர் அறிவித்தார். இதன்படி, 2030ம் ஆண்டுக்குள், நாட்டின் மொத்த மின் தேவையில், 50 சதவீதம் மாசு ஏற்படுத்தாத முறையில் தயாரிப்பது போன்ற திட்டங்களை அவர் முன் வைத்தார்.


latest tamil news




தேசிய பங்களிப்பு திட்டம்

இந்த ஐந்து திட்டங்களும் இணைந்து நிர்ணயிக்கப்பட்ட தேசிய பங்களிப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தேசிய பங்களிப்பு திட்டம், ஐ.நா., பருவநிலை மாறுபாடு அமைப்பிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X