குடிநீர் வினியோகம் சீராக இல்லை; குறைகேட்பு கூட்டத்தில் புகார்

Added : செப் 01, 2022 | |
Advertisement
கோவை : கோவை மாநகராட்சி, 26வது வார்டு பகுதியில் வசிப்போருக்கு, குடிநீர் வினியோகம் சீராக இல்லை. சூயஸ் நிறுவனம் பணிகளை விரைந்து முடிக்காமல் இருப்பதால், ரோடு படுமோசமாக இருப்பதாக, ம.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் சித்ரா குற்றஞ்சாட்டி உள்ளார்.இதுதொடர்பாக, கோவை மாநகராட்சியில், மேயர் கல்பனா தலைமையில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கவுன்சிலர் சித்ரா கொடுத்த மனு:26வது வார்டில்

கோவை : கோவை மாநகராட்சி, 26வது வார்டு பகுதியில் வசிப்போருக்கு, குடிநீர் வினியோகம் சீராக இல்லை. சூயஸ் நிறுவனம் பணிகளை விரைந்து முடிக்காமல் இருப்பதால், ரோடு படுமோசமாக இருப்பதாக, ம.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் சித்ரா குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக, கோவை மாநகராட்சியில், மேயர் கல்பனா தலைமையில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கவுன்சிலர் சித்ரா கொடுத்த மனு:26வது வார்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். அங்கன்வாடி சமையலறைக்குள், 5 அடி நீளமுள்ள பாம்பு பிடித்தோம்.பள்ளி வளாகம் முழுவதும் புதர்மண்டி இருப்பதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது. பள்ளி வளாகத்தில் சிறப்பு துாய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ரீராம் நகருக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எல்லை தோட்டம் ரோடு, தேவி ஸ்டீல்ஸ் குறுக்கு சாலையில், 'சூயஸ்' நிறுவனத்தினர் பணிகளை முடிக்காததால், சேறும் சகதியுமான சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சறுக்கி விழுந்து காயமடைந்திருக்கின்றனர்.ஆர்.கே.எம்.காலனி, பயனீயர் மில் ரோடு, ஸ்ரீராம் நகர், ஹட்கோ காலனி, முல்லை நகர், ராமசாமி லே-அவுட், ஏ.டி.காலனி போன்ற பகுதிகளில் வசிப்போருக்கு, குடிநீர் சப்ளை சீராக இல்லை.வார்டுக்கு உட்பட்ட தெருக்களில், சாக்கடை கால்வாய் சரியான வாட்டம் இல்லாமல் கட்டியிருப்பதால், சமீபத்தில் பெய்த மழையால் மழை நீர் சாக்கடை நீர் கலந்து ரோட்டில் வழிந்தோடியது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X