தியாகதுருகம் பகுதியில் 80 விநாயகர் சிலை பிரதிஷ்டை| Dinamalar

தியாகதுருகம் பகுதியில் 80 விநாயகர் சிலை பிரதிஷ்டை

Added : செப் 01, 2022 | |
தியாகதுருகம் : தியாகதுருகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் 80 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.தியாகதுருகம் பகுதியில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய தடை இருந்த நிலையில் இவ்வாண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.நகரில் இந்து



தியாகதுருகம் : தியாகதுருகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் 80 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.தியாகதுருகம் பகுதியில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய தடை இருந்த நிலையில் இவ்வாண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.நகரில் இந்து முன்னணி சார்பில் 17 சிலைகள் உட்பட மொத்தம் 22 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தியாகதுருகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் 80 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று மாலை பிரம்மாண்ட சிலைகளுக்கு பூஜைகள் நடந்தது.வரும் 4 ம் தேதி சிலைகளை கோமுகி அணைக்கு கொண்டு சென்று கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X