சுவர் இடிந்து இருவர் பலி; பொள்ளாச்சி அருகே சோகம்

Added : செப் 01, 2022 | |
Advertisement
ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதுார் அருகே, கோவில் சுவர் இடிந்து விழுந்ததில், 13 வயது சிறுவன் உள்பட இருவர் பலியாகினர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த, வேட்டைக்காரன்புதூர் எட்டித்துறையை சேர்ந்த முத்துலட்சுமியின் மகன் ஹரி, 13. நேற்று மாலை, அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர்களான நித்தீஸ், 11, நிர்மல், 14, ஆகியோருடன் ஆற்றுக்கு குளிக்க சென்றார். கனமழை காரணமாக அங்குள்ள
சுவர் இடிந்து இருவர் பலி; பொள்ளாச்சி அருகே சோகம்

ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதுார் அருகே, கோவில் சுவர் இடிந்து விழுந்ததில், 13 வயது சிறுவன் உள்பட இருவர் பலியாகினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த, வேட்டைக்காரன்புதூர் எட்டித்துறையை சேர்ந்த முத்துலட்சுமியின் மகன் ஹரி, 13. நேற்று மாலை, அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர்களான நித்தீஸ், 11, நிர்மல், 14, ஆகியோருடன் ஆற்றுக்கு குளிக்க சென்றார். கனமழை காரணமாக அங்குள்ள புத்துமாரியம்மன் கோவிலில் ஒதுங்கி நின்றனர். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் நடராஜ், 50, கோபால், 35, ஆகியோரும் அங்கு மழைக்கு ஒதுங்கியிருந்தனர். இரவு, 7:30 மணிக்கு மேல் கனமழையால் திடீரென கோவிலின் சுவர் இடிந்து விழுந்தது.

இதில், சுவர் மற்றும் சிமெண்ட் 'ஷீட்' மேற்கூரை அவர்களை நசுக்கியது. அருகே இருந்தவர்கள், அவர்களை மீட்டு வேட்டைக்காரன் புதுார் அரசு மருத்துவமனை அனுப்பினர். செல்லும் வழியில் ஹரி, நடராஜ் பரிதாபமாக இறந்தனர்; காயமடைந்த நித்தீஸ், நிர்மல் மற்றும் கோபால் சிகிச்சை பெறுகின்றனர்.இரவு, 10:00 மணிக்கு கோவை கலெக்டர் சமீரன், சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X