பழநி --'கொடை' ரோட்டில் நிலச்சரிவு : வாகன போக்குவரத்துக்கு தடை

Added : செப் 01, 2022 | |
Advertisement
பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி - கொடைக்கானல் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் சவரி காடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.பழநி, கொடைக்கானலையொட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று முன் தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மலை பகுதியிலிருந்து நீர்வரத்து அதிகரித்தது. பழநி - கொடைக்கானல் ரோட்டில் சவரிகாடு அருகே 50
பழநி --'கொடை' ரோட்டில் நிலச்சரிவு : வாகன போக்குவரத்துக்கு தடை




பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி - கொடைக்கானல் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் சவரி காடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.

பழநி, கொடைக்கானலையொட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று முன் தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மலை பகுதியிலிருந்து நீர்வரத்து அதிகரித்தது. பழநி - கொடைக்கானல் ரோட்டில் சவரிகாடு அருகே 50 மீட்டர் துாரத்துக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. ரோடும் பலத்த சேதமடைந்தது. பழநி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.இப்பகுதியில் 70 அடி துாரத்திற்கு மண் மூடைகளை அடுக்கி சீரமைக்கப்படுகிறது. இதனால் பழநி - கொடைக்கானல் ரோட்டில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
வாகனங்கள் கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.அபாய பகுதிகளில் தேவை பலகைகள்பூபதி, இருசக்கர வாகன விற்பனையாளர், பழநி: பழநியிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது. வியாபாரம் விஷயமாக மாதத்தில் பலமுறை கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பாதையில் நிலச்சரிவு காரணமாக அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.
பழநி கொடைக்கானல் சாலையை விரிவு படுத்த வேண்டும். இல்லையேல் பழநியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மாற்று பாதை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்பாதையில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். தற்போது வத்தலகுண்டு பாதை வழியாக கொடைக்கானல் செல்ல அறிவுறுத்துகின்றனர். இதனால் கால விரையம், பொருள் விரையமும் ஏற்படுகிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X