மாணவியுடன் திருமணம்: மாணவர் மீது 'போக்சோ'

Added : செப் 01, 2022 | |
Advertisement
குடியாத்தம் : குடியாத்தம் அருகே, பள்ளி மாணவியை திருமணம் செய்த மாணவரை, 'போக்சோ' சட்டப்பிரிவில் போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பத்திலுள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வரும், 16 வயது மாணவி; அதே பள்ளியில் குடியாத்தத்தை சேர்ந்த, 17 வயது மாணவர் பிளஸ் 2 படிக்கிறார்; இருவரும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோருக்கு தெரிந்து



குடியாத்தம் : குடியாத்தம் அருகே, பள்ளி மாணவியை திருமணம் செய்த மாணவரை, 'போக்சோ' சட்டப்பிரிவில் போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பத்திலுள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வரும், 16 வயது மாணவி; அதே பள்ளியில் குடியாத்தத்தை சேர்ந்த, 17 வயது மாணவர் பிளஸ் 2 படிக்கிறார்; இருவரும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோருக்கு தெரிந்து கண்டித்துள்ளனர். இருவரும் கடந்த, 20ல் வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து, அவர்களின் பெற்றோர் குடியாத்தம் போலீசில் புகார் செய்தனர்.
விசாரணையில், ஆந்திர மாநிலம், சித்துாரிலுள்ள ஹோட்டலில் அவர்கள் தங்கியிருப்பது தெரிந்து, அவர்களை போலீசார் மீட்டு வந்தனர்.தொடர்ந்து நேற்று போக்சோ சட்டத்தில் மாணவரை கைது செய்து, சென்னையிலுள்ள சிறுவர் சிறையில் அடைத்தனர். மாணவியை வேலுார் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X