உளுந்துார்பேட்டை ஆட்டு சந்தை 'வெறிச்'

Added : செப் 01, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் நடந்த வார சந்தைக்கு ஆடுகள் வரத்தின்றி வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.உளுந்துார்பேட்டையில் சேலம் சாலையில் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே புதன்கிழமை தோறும் ஆட்டு சந்தை நடப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வார சந்தை நடக்கும் பகுதி, சந்தைக்கு செல்லும் வழி சேறும் சகிதமாக மாறி உள்ளது.இதனால் வார சந்தை நடக்கும்
உளுந்துார்பேட்டை  ஆட்டு சந்தை 'வெறிச்'



உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் நடந்த வார சந்தைக்கு ஆடுகள் வரத்தின்றி வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உளுந்துார்பேட்டையில் சேலம் சாலையில் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே புதன்கிழமை தோறும் ஆட்டு சந்தை நடப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வார சந்தை நடக்கும் பகுதி, சந்தைக்கு செல்லும் வழி சேறும் சகிதமாக மாறி உள்ளது.இதனால் வார சந்தை நடக்கும் ஏரி பகுதிக்கு செல்வதற்கு வியாபாரிகள், ஆட்டின் உரிமையாளர்கள் தயக்கம் காட்டினர். நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதாலும், வார சந்தை நடக்கும் நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததாலும் வார சந்தைக்கு ஆடுகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது.மேலும் வார சந்தை நடக்கும் இடத்தில் சேறும் சகிதமாக இருந்ததால் வியாபாரிகளும் அதிக அளவில் வார சந்தைக்கு வரவில்லை. இதனால் நேற்று வழக்கத்துக்கு மாறாக 150 க்கும் குறைவான ஆடுகளே விற்பனைக்காக வந்திருந்தன.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X