'சைபர்' குற்றம் தடுக்க போலீஸ் தீவிரம்: பல இடங்களில் தொடர் ஆய்வு

Updated : செப் 01, 2022 | Added : செப் 01, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 'சைபர்' குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓராண்டில் மட்டும் 38 லட்சம் ரூபாயை மீட்டுள்ளதோடு, மோசடியில் ஈடுபட்டுள்ளோரை கைது செய்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனி பிரிவாக, 'சைபர் செல் மற்றும் சைபர் க்ரைம்' காவல் நிலையம், 2021 மே 3ல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 'சைபர்' குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓராண்டில் மட்டும் 38 லட்சம் ரூபாயை மீட்டுள்ளதோடு, மோசடியில் ஈடுபட்டுள்ளோரை கைது செய்துள்ளனர்.latest tamil news
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனி பிரிவாக, 'சைபர் செல் மற்றும் சைபர் க்ரைம்' காவல் நிலையம், 2021 மே 3ல் துவங்கப்பட்டது.இங்கு, 'ஆன்லைன்' பண மோசடி, 'லோன் ஆப்' மோசடி, ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புதல், 'மார்பிங்' போன்ற குற்றங்கள் விசாரிக்கப்படுகின்றன.

செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., சுகுணாசிங் உத்தரவின்படி, ஏ.டி.எஸ்.பி., பொன்ராமு மேற்பார்வையில், 'சைபர்' காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் 10 பேர் பணிபுரிகின்றனர்.இக்குழுவினர், மாவட்டத்தில் பதிவாகும் 'சைபர்' வழக்குகளில் குற்றவாளிகளை தேடிப் பிடித்து கைது செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களுக்கும் சென்று, சைபர் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:

'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்காமல், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 'ஆன்லைனில்' பணம் அனுப்பும் முன், சம்பந்தப்பட்டோரின் உண்மைத்தன்மையை அறிய வேண்டும்.'ஓ.எல்.எக்ஸ்.,' போன்ற சில வர்த்தக வலைதளங்களில், முன்னாள் ராணுவ வீரரின் புகைப்படங்களை வைத்து, குறைவான விலையில் பொருட்கள் விற்கப்படுகின்றன. அதற்கு முன் பணம் செலுத்துமாறு கூறி ஏமாற்றுகின்றனர்.


latest tamil news
சிலர், கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டு, போலியான செயலி வாயிலாக 'பேடிஎம், ஜி பே'வில் பணம் செலுத்திவிட்டதாக தகவல் காட்டி ஏமாற்றுகின்றனர்.இது போன்ற நபர்களிடம், வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்து விட்டதா என பார்த்து, வியாபாரிகள், பொருட்களை கொடுக்க வேண்டும்.மொபைல் போன் எண்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்., இ - மெயில் மற்றும் சில 'லிங்க்'களில், மொபைல் எண், வங்கி கணக்கு, ஓ.டி.பி., - ஏ.டி.எம்., கார்டு எண் போன்ற எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ஆன்லைனில் பண மோசடி நடந்தால், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.சைபர் குற்றவாளிகளால் ஏற்படும் மோசடிகளுக்கு, '1930' என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டால், உங்களிடம் மோசடி செய்தோரின் வங்கி கணக்குகள் முடக்கப்படும். உங்களுக்கு பணத்தை மீண்டும் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

'சைபர் கிரைம்' புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து வருவதால், செங்கல்பட்டு எஸ்.பி., சுகுணா சிங், அப்பிரிவு போலீசாரை, வெகுவாக பாராட்டினார்.


தீர்வு காணப்பட்ட முக்கிய வழக்குகள்l செங்கல்பட்டு பகுதியில், 26 வயது திருமணமான இளம்பெண்ணின் பெயரில், சமூக வலைதளமான 'பேஸ்புக்'கில் போலி கணக்கு உருவாக்கி, ஆபாச புகைப்படங்களை பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். இக்குற்றத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த வீரமணிகண்டன், 26, என்ற வாலிபரை கைது செய்தனர்

l ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரிடம், பணம் முதலீட்டுக்கு 1 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, 'சன்மேலான்' செயலியில் 2.02 லட்சம் மோசடி செய்த சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பிரவீன்குமார், 31, என்ற வாலிபரை கைது செய்தனர்

l கேளம்பாக்கம் அடுத்த தையூரைச் சேர்ந்த 35 வயதுடைய நபரிடம், ஆன்லைனில் 20 லட்சம் ரூபாய்க்கு லோன் தருவதாக கூறி, பல தவணையாக, 4.22 லட்சம் ரூபாய் ஏமாற்றிய டில்லியைச் சேர்ந்த ராமசந்திரன், 33, விஜய், 29, ஆகியோரை பிடித்துள்ளனர்

l செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் பெயரில் போலி முகநுால் கணக்கு துவக்கி, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் 'கறக்க' முயன்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, 16 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு, இளம்சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்

l மேல்மருவத்துார், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த இருவர், வேலைக்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். அதிலிருந்து, அவர்களது 'இ - மெயில்' முகவரி திருடிய சிலர், போலந்து நாட்டில் வேலை தருவதாக கூறி ஆன்லைனில், 8.16 லட்சம் ரூபாய் 'ஆட்டை' போட்ட, டில்லியைச் சேர்ந்த நவீன்குமார், 24, ரூம்சந்த், 31, ஆகிய இருவரை கைது செய்தனர்இதேபோல் பல ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை பல மாநிலங்கள், மாவட்டங்களுக்கு சென்று போலீசார் கைது செய்துஉள்ளனர்.

l இதேபோல், 2021 - 22ம் ஆண்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட 176 மொபைல் போன்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
01-செப்-202213:30:14 IST Report Abuse
Girija 7.5 லட்சம் தமிழ்நாடு ஆயுத படை கமன்டேன்ட் ஏமாந்து இருக்கிறார். சைபர் கிரைம் நிஜமாகவே பூஜ்ஜியமா? துறைக்குள்ளே விழிப்பு உணர்வு இல்லை, கடைநிலை போலீஸ்கார்களுக்கு ஆன் லைன் ரம்மி, மற்றவர்களுக்கு வேறு விதமான பேராசை .
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
01-செப்-202212:51:45 IST Report Abuse
jayvee சைபர் போலீஸ், இன்ஸ்டாங்க்ராமில் வரும் விளம்பரங்களையும் கவனித்து, மத்திய குற்றப்பிரிவுடன் பகிரவேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X