விஸ்வநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் கோலாகலம்

Added : செப் 01, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம், 150 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. இங்கு துலா கட்ட விஸ்வநாதர், திருவழந்தூர் விஸ்வநாதர், வள்ளலார் விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பெரிய கோயில் விஸ்வநாதர், கூறைநாடு விஸ்வநாதர், தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆகிய ஏழு விஸ்வநாதர் கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றில் காவிரி ஆற்றின்
150, வருடம், விஸ்வநாதர் ஆலயம், கும்பாபிஷேகம், கோலாகலம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம், 150 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. இங்கு துலா கட்ட விஸ்வநாதர், திருவழந்தூர் விஸ்வநாதர், வள்ளலார் விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பெரிய கோயில் விஸ்வநாதர், கூறைநாடு விஸ்வநாதர், தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆகிய ஏழு விஸ்வநாதர் கோவில்கள் அமைந்துள்ளன.
இவற்றில் காவிரி ஆற்றின் தென்கரையில் அகஸ்தியரால் வழிபாடு செய்யப்பட்ட தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் வழிபட முடியாத நிலைமை இருந்து வந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை ஒட்டி காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு புனித கடங்களில் நிரப்பப்பட்டது. தொடர்ந்து 14 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று(செப்.,01) யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது.

ஏழ்நிலை ராஜகோபுரங்கள், சுவாமி, அம்பாள் கோபுர கலசங்கள் உள்ளிட்டவற்றிற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. கொட்டும் மழையில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
01-செப்-202219:43:12 IST Report Abuse
Bhaskaran நான் வள்ளலார் விஸ்வநாதர்கோவிலுக்கு சென்றிருக்கிறேன் .சைவம் வளர்க்கும் மடத்துக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள்
Rate this:
Cancel
Sivak - Chennai,இந்தியா
01-செப்-202212:17:32 IST Report Abuse
Sivak ஹர ஹர மஹாதேவ்
Rate this:
Cancel
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
01-செப்-202211:10:12 IST Report Abuse
nagendirank ஓம் நமசிவாய வாழ்க தருமை ஆதீனம் வாழ்க. மென்மேலும் பல திருப்பணிகள் நடைபெற சிவனை வேண்டுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X