வெவ்வேறு இடங்களில் மூன்று பேர் தற்கொலை| Dinamalar

வெவ்வேறு இடங்களில் மூன்று பேர் தற்கொலை

Added : செப் 01, 2022 | |
வெவ்வேறு சம்பவத்தில், மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 37; ஓசூர் அடுத்த அகரம் கிராமத்தில் தங்கி, டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் மனைவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன், உடல்நலக்குறைவால் இறந்ததால் மனமுடைந்த அவர், கடந்த, 29ல் விஷம் குடித்தார்.தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம்

வெவ்வேறு சம்பவத்தில், மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 37; ஓசூர் அடுத்த அகரம் கிராமத்தில் தங்கி, டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் மனைவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன், உடல்நலக்குறைவால் இறந்ததால் மனமுடைந்த அவர், கடந்த, 29ல் விஷம் குடித்தார்.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
பாகலுார் அடுத்த கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீராம், 51, டெம்போ டிரைவர்; கடன் சுமையால் கடந்த, 28ல் விஷம் குடித்தார். ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இறந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓசூர் பஸ்தி இந்திரா நகரை சேர்ந்தவர் பத்மா, 50, தனியார் நிறுவன ஊழியர்; இவருக்கும், அவரது மூத்த மகளுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
மனமுடைந்த அவர், கடந்த, 29ல் இரவு விஷம் குடித்து
தற்கொலை செய்து கொண்டார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X