ஏரிகளில் மீன் பிடிக்க பகிரங்க ஏலம்

Added : செப் 01, 2022 | |
Advertisement
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் மீன் பிடிக்க பகிரங்க ஏலம் விடப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும், 2023 ஜூன், 30 வரை முடிவடையும் ஓராண்டிற்கு மீன் பிடிக்கும் உரிமையை, கிருஷ்ணகிரி அணை உதவி பொறியாளரால் பகிரங்க ஏலம் விடுவது குறித்து, மாவட்ட அரசிதழில்


பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் மீன் பிடிக்க பகிரங்க ஏலம் விடப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும், 2023 ஜூன், 30 வரை முடிவடையும் ஓராண்டிற்கு மீன் பிடிக்கும் உரிமையை, கிருஷ்ணகிரி அணை உதவி பொறியாளரால் பகிரங்க ஏலம் விடுவது குறித்து, மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி அணை உதவிபொறியாளர் அலுவலக வளாகத்தில் வரும், 5ல் காலை, 11:00 மணிக்கு குண்டலப்பட்டி பஞ்., புது ஏரி, மதியம், 2:00 மணிக்கு குரும்பட்டி ஏரி, 6ல் காவேரிப்பட்டணம் ஊராட்சி கோபாலஜோசியர் குட்டை, மிட்டஅள்ளி ஏரி, 7ல் குண்டலப்பட்டி பஞ்., எல்லுக்குட்டை ஏரி, காவேரிப்பட்டணம் சூரியநாராயணன் ஏரி, 8ல் எர்ரஅள்ளி பஞ்., செங்குட்டை ஏரி, காவேரிப்பட்டணம் மிட்சுக்கான் குட்டை ஏரி, 9ல் பெண்ணேஸ்வரமடம் மல்லப்பன் ஏரி, காவேரிப்பட்டணம் கொல்லப்பட்டி ஏரி ஆகிய ஏரிகளுக்கான
பகிரங்க ஏலம் விடப்படுகிறது.
இதேபோல், 12ல் எர்ரஅள்ளி ஒட்டன் குட்டை, எர்ரஅள்ளி ஏரி, 13ல் எர்ரஅள்ளி கல்லேரி, நடுஏரி, 14ல் ஜெகதாப் மாணிக்கனுார் ஏரி, கொட்டாயூர் ஏரி, 15ல் பையூர் ஏரி, பெரியமுத்துார் முகமதுகவுஸ் ஏரி, 16ல் சவுட்டஅள்ளி மலையாண்டஅள்ளி ஏரி, தளிஅள்ளி ஏரி, 19ல் மாரிசெட்டிஅள்ளி ஆணான்குட்டை ஏரி ஆகிய ஏரிகளுக்கான, ஏலம் விடப்படும். ஏலம் எடுக்க விரும்புவோர் முன் பணமாக, 2,500 ரூபாய் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X