மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.78 லட்சத்துக்கு காய்கறி விற்பனை

Added : செப் 01, 2022 | |
Advertisement
சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில், 78.24 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்தது.சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆட்டையாம்பட்டி உள்பட, 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி, சந்தைகளில் காய்கறி வாங்க வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தேங்காய், வாழைப்பழம், பழங்கள், இலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை

சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில், 78.24 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்தது.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆட்டையாம்பட்டி உள்பட, 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி, சந்தைகளில் காய்கறி வாங்க வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தேங்காய், வாழைப்பழம், பழங்கள், இலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
தக்காளி கிலோ, 20 முதல், 24 ரூபாய்; உருளைக்கிழங்கு, 38 முதல், 60; கத்திரிக்காய், 18 முதல், 26; பீன்ஸ், 60 முதல், 70; சின்ன வெங்காயம், பெரியவெங்காயம் தலா, 30; பச்சைமிளகாய், 52, வெண்டைக்காய், 18, சுரக்காய், 20, பீர்க்கங்காய், 48, புடலங்காய், 26, பாகற்காய், 32, முள்ளங்கி, 14, அவரை, 32, கேரட், 84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 11 உழவர் சந்தைகளில், 246 டன் காய்கறி, பழங்கள் மூலம், 78 லட்சத்து, 24 ஆயிரத்து 949 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அதிகபட்சமாக சூரமங்கலம் சந்தையில், 13.82 லட்சம், குறைந்தபட்சமாக ஆட்டையாம்பட்டியில், 3.08 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X