குப்பனூரில் கனமழையால் உடைந்த பாலம் போக்குவரத்துக்கு வழியின்றி மக்கள் அவதி| Dinamalar

குப்பனூரில் கனமழையால் உடைந்த பாலம் போக்குவரத்துக்கு வழியின்றி மக்கள் அவதி

Added : செப் 01, 2022 | |
குப்பனுாரில் கனமழையால் பாலம் உடைந்ததால் போக்குவரத்துக்கு வழியின்றி மக்கள் அவதிப்பட்டனர்.சேலம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த குப்பனுாரில், சேலம் - -அரூர் பிரதான சாலையில் இருந்து, குப்பனுார் ஊருக்குள் செல்லும் சாலை நடுவே, திருமணிமுத்தாறு மேம்பாலம் உள்ளது. நேற்று பெய்த கனமழையால், மழைநீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அந்த மேம்பாலம் உடைந்து


குப்பனுாரில் கனமழையால் பாலம் உடைந்ததால் போக்குவரத்துக்கு வழியின்றி மக்கள் அவதிப்பட்டனர்.
சேலம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த குப்பனுாரில், சேலம் - -அரூர் பிரதான சாலையில் இருந்து, குப்பனுார் ஊருக்குள் செல்லும் சாலை நடுவே, திருமணிமுத்தாறு மேம்பாலம் உள்ளது. நேற்று பெய்த கனமழையால், மழைநீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அந்த மேம்பாலம் உடைந்து அடித்துச்செல்லப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர், அந்த வழியே செல்ல முடியாமல் தவித்தனர். வேலைக்கு சென்ற மக்களும், வீட்டுக்கு செல்ல வழியின்றி தவித்தனர். வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, அந்த வழியே செல்ல வேண்டிய மக்கள், பெரும் அவதிக்கு ஆளாகினர். இதனால், உடனே பாலம் அமைக்கவும், மாற்று பாதை ஏற்படுத்திக்கொடுக்கவும், மக்கள் வலியுறுத்தினர்.
மரம் சாய்ந்தது
வாழப்பாடி, அண்ணா நகரில், பேளூர் நெடுஞ்சாலையோரம் இருந்த புளிய மரம், சாலையில் சாய்ந்தது. இதனால் நேற்று மாலை, 6:00 மணி முதல், 30 நிமிடம், வாழப்பாடி - -பேளூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் மக்கள், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், மரத்தை அகற்றியதால், போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
சுரங்கப்பாதையில் மழைநீர்
வாழப்பாடி டவுன் பஞ்சாயத்தில், நேற்று மதியம் கனமழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், காளியம்மன் கோவில் முன், ரயில்வே மேம்பாலத்துக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிகளவில் தேங்கியது. அப்பகுதியில் உள்ள வழியின்றி, மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
ஆத்துப்பாலத்தை
மூழ்கடித்த வெள்ளம்
ஏற்காட்டில் கனமழையால், ஆத்துப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சீறிப்பாய்ந்ததால், போக்குவரத்து தடைபட்டது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சில நாளாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம், 3:00 மணிக்கு, ஏற்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை கொட்டியது. இதனால் ஏற்காட்டில் இருந்து கொட்டச்சேடு மலைப்பாதை வழியே, வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலத்தை மூழ்கடித்து, வெள்ளம் சீறிப்பாய்ந்தது. குறிப்பாக, காடுகளில் உள்ள மரம், செடி, கொடி, பாறை, கற்கள் உள்ளிட்ட அனைத்தையும் தள்ளிக்கொண்டு காட்டாற்று வெள்ளமாக மழைநீர் ஓடியது. அந்த வழியே, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், அந்த கிராம மக்கள்,
ஆங்காங்கே நின்று தவித்துக்கொண்டிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X