சேலத்தில் ஷாலோம் மெத்தை புது கிளை திறப்பு| Dinamalar

சேலத்தில் 'ஷாலோம்' மெத்தை புது கிளை திறப்பு

Added : செப் 01, 2022 | |
சேலம், சீலநாயக்கன்பட்டியில், 'ஷாலோம் மெத்தை' புது கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. உரிமையாளர் விஜயகுமார் வரவேற்றார். அவரது தாய் பாப்பாத்தி அம்மாள், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து, விஜயகுமாரின் மனைவி பிரியங்கா குத்துவிளக்கேற்றினார். உறவினர் பாலகிருஷ்ணன், முதல் விற்பனையை தொடங்கிவைத்தார். வாடிக்கையாளர்கள் பலர் பங்கேற்றனர்.இதுகுறித்து, விஜயகுமார்

சேலம், சீலநாயக்கன்பட்டியில், 'ஷாலோம் மெத்தை' புது கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. உரிமையாளர் விஜயகுமார் வரவேற்றார். அவரது தாய் பாப்பாத்தி அம்மாள், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து, விஜயகுமாரின் மனைவி பிரியங்கா குத்துவிளக்கேற்றினார். உறவினர் பாலகிருஷ்ணன், முதல் விற்பனையை தொடங்கிவைத்தார். வாடிக்கையாளர்கள் பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, விஜயகுமார் கூறியதாவது: திறப்பு விழா சலுகையாக ஒரு மெத்தை வாங்கினால் ஒரு மெத்தை இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கே தென்னை நார் மெத்தை(காயர்), ஸ்பிரிங் மெத்தை, தலையணை விற்கப்படுகிறது. மெத்தை, 750ல் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளது. 'காயர்' மெத்தைகளுக்கு, 2,800 முதல், 5,500 வரை உள்ள பேசிக், எகனாமி ரகங்களுக்கு மட்டும், ஒன்றுக்கு ஒன்று இலவசமாக மெத்தை வழங்கப்படுகிறது. இந்த ரகங்களுக்கு, 2 ஆண்டு உத்தரவாதம் உண்டு. காயர் ரக ஆர்த்தோ பெட்டிக் மெத்தையில், 8,000 முதல் விற்பனைக்கு கிடைக்கும். இதற்கு, 7 ஆண்டு உத்தரவாதம். ஸ்பிரிங் ரக மெத்தையில், 12 ஆயிரத்து, 500 ரூபாய் வரை உள்ள எகனாமி ரகங்களுக்கு ஒன்றுக்கு ஒன்று இலவசம் வழங்கப்படும். இதற்கு, 5 ஆண்டு உத்தரவாதம். பிரிமீயம் ரக மெத்தைகளுக்கு, 10 ஆண்டு உத்தரவாதம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X