சிறுமியை கடத்தி கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது பாய்ந்தது 'போக்சோ'

Added : செப் 01, 2022 | |
Advertisement
சிறுமியை கடத்தி சென்று கர்ப்பமாக்கிய, கூலித்தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் கோபி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.ஈரோடு மாவட்டம், கோபி, கலிங்கியம் அருகே செல்லிபாளையத்தை சேர்ந்தவர் சஞ்சய், 22; கூலித்தொழிலாளி. இவர் தான் கூலி வேலைக்கு சென்ற இடத்தில், கோபி அருகே நஞ்சகவுண்டம்பாளையத்தை சேர்ந்த, 17 வயது சிறுமியும் வேலைக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும்

சிறுமியை கடத்தி சென்று கர்ப்பமாக்கிய, கூலித்தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் கோபி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்
பதிவு செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபி, கலிங்கியம் அருகே செல்லிபாளையத்தை சேர்ந்தவர் சஞ்சய், 22; கூலித்தொழிலாளி. இவர் தான் கூலி வேலைக்கு சென்ற இடத்தில், கோபி அருகே நஞ்சகவுண்டம்பாளையத்தை சேர்ந்த, 17 வயது சிறுமியும் வேலைக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தால், அந்த சிறுமியை கடத்தி சென்று, மொடச்சூரில் உள்ள மாரியம்மன் கோவிலில், சஞ்சய் திருமணம் செய்தார்.
தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி, நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு சைல்டு லைன் ஆலோசகர் தீபக்குமார், 31, கோபி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். கோபி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சஞ்சய் என்பவரை தேடி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை, ஈரோடு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X