" நான் ஒன்றும் இயேசு அல்ல , அடிச்சா திருப்பி அடிப்பேன் " - கொதிக்கிறார் அண்ணாமலை

Updated : செப் 01, 2022 | Added : செப் 01, 2022 | கருத்துகள் (208) | |
Advertisement
திருநெல்வேலி: தமிழக நிதியமைச்சர் தியாகராஜனுக்கு பதிலடி கொடுத்தது தவறில்லை எனக்கூறியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அடித்தால் திருப்பி அடிப்பேன். மரியாதை கொடுத்தால், இரட்டிப்பாக அதனை செய்வேன் எனக்கூறினார்.நெல்லையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அண்ணாதுரை முதல்வராக பதவியேற்ற பிறகு தான், விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அண்ணாதுரை
விநாயகர் சதுர்த்தி, தியாகராஜன், அண்ணாமலை, பாஜ, annamalai, bjp, k annamalai, ptr, thiyagarajan,Ganesha Chaturthi, vinayagarchaturthi

திருநெல்வேலி: தமிழக நிதியமைச்சர் தியாகராஜனுக்கு பதிலடி கொடுத்தது தவறில்லை எனக்கூறியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அடித்தால் திருப்பி அடிப்பேன். மரியாதை கொடுத்தால், இரட்டிப்பாக அதனை செய்வேன் எனக்கூறினார்.நெல்லையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அண்ணாதுரை முதல்வராக பதவியேற்ற பிறகு தான், விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அண்ணாதுரை வகுத்த பாதையில் இருந்து திமுக அரசு எந்தளவு விலகி உள்ளது என்பதற்கு முதல்வர் வாழ்த்து சொல்லாதது, ஹிந்து சமய அறநிலையத்துறை அவர்கள் சார்ந்த துறை வாழ்த்து சொல்லியதற்கு கேள்வி எழுப்பியது உதாரணம். விநாயகர் சதுர்த்திக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை வாழ்த்து சொல்லியது தவறு கிடையாது. ஒரே தவறு. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது தான். முதல்வரின் செயல், அனைத்து மதத்தையும் சமமாக நடத்துவேன் என்பதற்கு எதிராக உள்ளது. முதல்வர் வாழ்த்து சொல்லாததன் மூலம், அவர் மத அரசியல் செய்கிறார் என்பது மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதமாகி உள்ளது.தமிழகத்தை விட உ.பி.,யின் நிகர வருமானம் உயர்ந்துள்ளது. உத்தர பிரதேசம் சரியில்லை எனக்கூறி ஆட்சி செய்கிறீர்கள். ஆனால், தமிழகத்தை விட உ.பி.,யின் நிகர வருமானம் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் நிகர வருமானம் குறைந்துள்ளதற்கும் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் பதில் சொல்ல வேண்டும்.தமிழகத்தின் அரசியலுக்கு அண்ணாமலை சாபக்கேடு என தியாகராஜன் சொல்வதற்கு என்ன உரிமை உள்ளது. நீங்கள் தான் சாபக்கேடு. சுதந்திரத்திற்கு முன்னர் கிழக்கிந்திய கம்பெனியோடு கொஞ்சி குழாவவில்லையா?. ஜஸ்டீஸ் கட்சிக்கு தொடர்பில்லையா?. 1941ல் நீங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க வேண்டாம். வழங்கினால் இங்கிலாந்தில் இருந்து ஆட்சி செய்யுங்கள் எனக்கூறினார்கள். அந்த கட்சியின் வழித்தோன்றலாக வந்து அமர்ந்துவிட்டு என்னை பார்த்து அந்த வார்த்தை பயன்படுத்த என்ன அருகதை உள்ளது. தி.மு.க.,வில் யாருக்கும் அந்த அருகதை கிடையாது. உங்களுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் உள்ள தொடர்பு தமிழக மக்களுக்கு தெரியும். வெட்கம், மானம் சூடு இல்லாமல் பழைய சரித்திரத்தை மறைத்துவிட்டு இந்தியாவிற்கு போராடியதாக 2022ல் காட்டுவதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.latest tamil news

திமுக பழைய பாணி அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும். என்னை மிரட்டி பார்த்தால், இப்படி தான் பதில் இருக்கும். மிரட்டி பார்க்க நாங்கள் வரவில்லை. நான் விவசாய தோட்டத்தில் சென்று விவசாயம் செய்து பிழைத்து கொள்வேன். உங்களால் முடியுமா?தகாத வார்த்தை பேசுவீர்கள். ஆபாசம் காட்டுவீர்கள். ஐ.டி., விங் வைத்து பேசுவீர்கள் நான் இயேசுநாதர் கிடையாது. ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்ட நான் இயேசு கிடையாது. அடித்தால் திருப்பி அடிப்பேன். அத்துமீறினால், அதனை இரு மடங்காக செய்வேன். இதனால், எதை இழந்தாலும் கவலை கிடையாது. மரியாதை செய்தால் இரட்டிப்பாக மரியாதை செய்தேன். தியாகராஜனுக்கு பதிலடி கொடுத்தது எந்த தவறும் கிடையாது. நான் தன்மானம் இருக்கும் அரசியல்வாதி.எதையும் விற்று பிழைத்து, யாரின் கால் பிடித்து பதவிக்கு வரவில்லை. பதவியில் உட்கார ஆசையில்லை. அண்டி பிழைத்து, ஒருவரை ஒட்டி பிழைத்து இருக்கும் அவசியம் அண்ணாமலைக்கு கிடையாது. பா.ஜ., உறுப்பினராக இருப்பதே பெருமை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (208)

Venkat - Mumbai,இந்தியா
20-செப்-202203:04:29 IST Report Abuse
Venkat என்ன அடி.. எதற்கு அடிச்சாங்கன்னு மொதல்ல சொல்லு ...
Rate this:
Cancel
Murattu Kaalai - Tuticorin,இந்தியா
04-செப்-202219:45:10 IST Report Abuse
Murattu Kaalai ,,,,..
Rate this:
Cancel
Ramaswami Sampath - mumbai,இந்தியா
02-செப்-202205:13:46 IST Report Abuse
Ramaswami Sampath தாமரை தமிழக மக்களுக்கு என்ன செய்தது??ஒன்றும் இல்லை.அதனால் தினமும் தி மு கவை குற்றம் கண்டு பிடித்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பார்.அதுவும் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள்.இப்படி அரசியல் செய்தால் வரும் லோக் சபா தேர்தலில் தாமரை ஐந்து இடங்கள் கூட கிடைக்காது.அப்போது இவருக்கு பதவி காலி ஏனென்றால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
Rate this:
Rajsri - chennai,இந்தியா
03-செப்-202210:53:25 IST Report Abuse
Rajsriதாமரை மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் சொல்லும் போது, மற்ற திராவிட கட்சிகள் என்ன செய்தது என்பதை சொன்னால் நல்லது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்ட அல்லது ஆதாரம் இருக்கிறதா என்பது உங்களுக்கு எப்படி தெரியும். ஊழலில் உங்களுக்கு ஏதேனும் பங்கு வருகிறதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X