மலையாளத்தில் திருக்குறள் புத்தகம்.

Added : செப் 01, 2022 | |
Advertisement
பந்தலூர்: பந்தலூர் அருகே தாளூர் பகுதியில் செயல்படும், நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், திருக்குறள் புத்தகத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மேலாளர் உம்மர் வரவேற்றார். கல்லூரியின் நிர்வாக இயக்குனரும் செயலாளருமான, ராஷித்காஸ்ஸாலி, மலையாளத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகத்தை கேரளா மாநிலத்தில் செயல்படும் ஓலீவ்
மலையாளத்தில் திருக்குறள் புத்தகம்.

பந்தலூர்: பந்தலூர் அருகே தாளூர் பகுதியில் செயல்படும், நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், திருக்குறள் புத்தகத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மேலாளர் உம்மர் வரவேற்றார். கல்லூரியின் நிர்வாக இயக்குனரும் செயலாளருமான, ராஷித்காஸ்ஸாலி, மலையாளத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகத்தை கேரளா மாநிலத்தில் செயல்படும் ஓலீவ் பதிப்பகத்தின் மூலம், வெளியிட்டனர். எம். எல் ஏ. ஜெய்சீலன், ராஷித் கஸ்ஸாலி, பதிப்பகத்தின் தலைவரும், கேரளா மாநில எம்.எல்.ஏ. வுமான டாக்டர் முனீர், ஆர்வலர் நாராயணன் டாக்டர் அசிஸ் தாருவானா ஆகியோர் பங்கேற்று, திருக்குறள் முக்கியத்துவம் மற்றும் மாணவர்கள் அதனை படித்து பயன்பெற வேண்டியது அவசியம் குறித்து விளக்கிப் பேசி, புத்தகத்தை வெளியிட்டனர்.
மேலும் 75 வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில், 75 முதியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் செந்தில்குமார், டீன் பேராசிரியர் மோகன் பாபு, சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் லில்லி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X