அறிவியல் சில வரிச் செய்திகள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அறிவியல் சில வரிச் செய்திகள்

Added : செப் 01, 2022 | |
சூரியப் புயல் ஆபத்து!சுட்டெரிக்கும் சூரியனின் மீது சில கரும்புள்ளிகள் போன்ற தோற்றம் ஏற்படுவதுண்டு. இதில் பூமியை நோக்கி இருக்கும் ஒரு புள்ளி, பூமி அளவுக்கு வளர்ந்து வருகிறது. இதனால், திடீர் சூரியப் புயல்கள் ஏற்பட்டு, சூரியனின் மின்காந்த வெப்பச் சுவாலைகள் பூமியை நோக்கி விசப்படலாம் என நாசா விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், பூமியிலுள்ள ரேடியோ மற்றும்
நாசா விஞ்ஞானிகள், குரங்கம்மை , நுரையீரல் தொற்று, NASA scientists, monkeypox, lung infection,


சூரியப் புயல் ஆபத்து!


சுட்டெரிக்கும் சூரியனின் மீது சில கரும்புள்ளிகள் போன்ற தோற்றம் ஏற்படுவதுண்டு. இதில் பூமியை நோக்கி இருக்கும் ஒரு புள்ளி, பூமி அளவுக்கு வளர்ந்து வருகிறது. இதனால், திடீர் சூரியப் புயல்கள் ஏற்பட்டு, சூரியனின் மின்காந்த வெப்பச் சுவாலைகள் பூமியை நோக்கி விசப்படலாம் என நாசா விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், பூமியிலுள்ள ரேடியோ மற்றும் மின்னணு கருவிகளுக்கு லேசானது முதல் மிதமானது வரை பாதிப்பு ஏற்படலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


சளி உருவான விதம்


நுரையீரலில் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கும் அரணாக இருப்பது சளி தான். லேசான ஈரப்பதம் நுரையீரலில் இருக்கும். இந்த ஈரப்பதத்தோடு இருக்கும் சளி தான் பலவிதமான வைரஸ்கள், பாக்டீரியாக்கள் நுரையீரலை ஆக்கிரமிக்காமல் எதிர்க்கும் முதல் தடுப்பு சக்தி. இந்த சளியிலுள்ள நல்ல புரதங்கள் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாமம் அடைந்து தான் இப்போதைய சளியின் வடிவத்தை உடல் உருவாக்கியதாக, அமெரிக்காவிலுள்ள பப்பலோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பலவித புரதங்களை கலந்துது தான் சளி உருவாக்கியிருக்கிறது.


குரங்கம்மை குறைகிறது


வளர்ந்த நாடான அமெரிக்காவில், தினமும் 330 குரங்கம்மை நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர். இதே போல உலகெங்கும் குரங்கம்மை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு அண்மையில் ஆறுதலான சேதியை சொல்லியுள்ளது. அதாவது, கடந்த வார கணக்குப்படி, புதிய குரங்கம்மை தொற்று எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது. குரங்கம்மை தொற்று ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்குச் சென்றால், அதற்கு சிகிச்சை உள்ளது என்பது மேலும் ஆறுதலான விஷயம்.


சேவைப் பிரதேசம்


அடுத்தவர்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் எல்லாருக்கும் உள்ளது. சரி, அப்படிப்பட்ட எண்ணம் மூளையில் எந்தப்பகுதியில் தோன்றுகிறது? தனக்குத் தானே உதவிக்கொள்ளும் எண்ணம் உதிக்கும் இடத்தை சில ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த நிலையில், பிறருக்கு உதவும் மனப்பான்மை மூளையின் முன்பகுதியில், 'ஆன்ட்ரீயர் சிங்குலேட் கார்டெக்ஸ் கைரஸ்' என்ற இடத்தில் பிறகுக்கு உதவும் எண்ணம் உதிக்கிறது. இதுகுறித்த ஆய்வு, கரன்ட் பயாலஜி இதழில் வெளிவந்துள்ளது.


'உணர்வுள்ள' சர்க்கியூட்!


செயற்கையாக உருவாக்கப்பட்ட ரப்பர் பாலிமரை வைத்து விஞ்ஞானிகள் ஒரு புதுமையான சர்க்யூட் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த சர்க்கியூட் அமைப்பு வெளி ஆற்றலின் துாண்டுதலையடுத்து சில இயக்கங்களைச் செய்யும் திறன் கொண்டது. மேலும், சில நிலைகளை இந்த பாலிமர் சர்க்கியூட்டுகளால் 'நினைவில்' வைத்திருக்கவும் முடியும். இந்தத் திறனால் சில வெளித்துாண்டுதலின்பேரில் முடுக்கிகளாக இவை செயல்பட முடியும். இது குறித்த ஆய்வு 'நேச்சர்' இதழில் வெளிவந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X