வருவாய் இல்லாததால் உதவி இயக்குனர் தற்கொலை

Added : செப் 01, 2022 | |
Advertisement
வேலுார்: குடும்பம் நடத்த வருவாய் இல்லாததால் வேலுார் அருகே சினிமா உதவி இயக்குனர் தற்கொலை செய்து கொண்டார்.வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த மாதாண்டகுப்பத்தை சேர்ந்தவர் சந்திரன், 40. தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இதற்காக சென்னை சைதாப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 20 ம் தேதி வெளியே சென்ற சந்திரன் வீடு திரும்பவில்லை. அவரது

வேலுார்: குடும்பம் நடத்த வருவாய் இல்லாததால் வேலுார் அருகே சினிமா உதவி இயக்குனர் தற்கொலை செய்து கொண்டார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த மாதாண்டகுப்பத்தை சேர்ந்தவர் சந்திரன், 40. தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இதற்காக சென்னை சைதாப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த 20 ம் தேதி வெளியே சென்ற சந்திரன் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சரஸ்வதி, 35, சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு மாத்தாண்டகுப்பம் ஆற்றங்கரையோரம் மாடு மேய்க்க சென்றவர்கள் அங்குள்ள மரத்தில் அழுகிய நிலையில் ஒருவர் துாக்கிட்டு சடலமாக இருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் சினிமா உதவி இயக்குனர் சந்திரன் என்பதும், குடும்பம் நடந்த வருவாய் இல்லாததால், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக வேலை செய்ததும், இதனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்து அவர் சொந்த ஊரில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X