அடித்தால் திருப்பி அடிப்பேன்: அண்ணாமலை அதிரடி

Updated : செப் 02, 2022 | Added : செப் 01, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை: ''ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட, நான் இயேசு கிறிஸ்து கிடையாது; அடித்தால் திருப்பி அடிப்பேன்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, தி.நகர், தேவர் திருமண மண்டபத்தில் உள்ள அவரின் உருவப் படத்திற்கு, அண்ணாமலை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.பின், அண்ணாமலை
அடித்தால் திருப்பி அடிப்பேன்: அண்ணாமலை அதிரடி

சென்னை: ''ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட, நான் இயேசு கிறிஸ்து கிடையாது; அடித்தால் திருப்பி அடிப்பேன்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, தி.நகர், தேவர் திருமண மண்டபத்தில் உள்ள அவரின் உருவப் படத்திற்கு, அண்ணாமலை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.பின், அண்ணாமலை அளித்த பேட்டி: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு முதன்முறையாக விடுமுறை அறிவித்தது, தி.மு.க., அரசு தான். அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்றதும் விடுமுறையை அறிவித்தார்.


மத அரசியல்


அண்ணாதுரை வகுத்து கொடுத்த பாதையில் இருந்து, தி.மு.க., எந்தளவிற்கு மாறி இருக்கிறது என்பது, முதல்வர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததில் இருந்து தெரிகிறது. நாங்கள் ஹிந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என, பிரித்து பார்ப்பது இல்லை. பிரதமர் மோடி அனைத்து மதத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.


முதல்வர் வாழ்த்து சொல்லாதது வாயிலாக, அவர் மத அரசியல் செய்வது ஊர்ஜிதமாகி இருக்கிறது. பா.ஜ., மத அரசியல் செய்கிறது என்று கூறுவதற்கு, எந்த முகாந்திரமும் கிடையாது. தமிழகத்தில் அரசியல் என்பது கருத்தியல் அடிப்படையில் இருக்க வேண்டும்.


கவனம்


ஒருவரை தரம் தாழ்ந்து பேசக் கூடாது. நிதி அமைச்சர் என்னை பற்றி முகநுாலில் பதிவிட்ட கருத்துக்கு, நான் அளித்த கருத்தில், எந்த தவறும் கிடையாது. நான் சுத்தமாக, நேர்மையாக அரசியல் செய்ய வந்திருக்கிறேன். சாக்கடை அரசியலுக்குள் செல்லக் கூடாது என்பதில் நானும், கட்சியும் கவனமாக இருக்கிறோம். சாபக்கேடு, நிதி அமைச்சர் தியாகராஜன் தான். அவரின் மூதாதையர், கிழக்கிந்திய நிறுவனத்திடம் கொஞ்சி குலாவினர்; 'சுதந்திரம் வேண்டாம்' என்று கூறினர்.


பதிலடி


மிரட்டி, உருட்டி விடலாம் என்ற தன் பழைய அரசியல் பாணியில் இருந்து, தி.மு.க., வெளியே வர வேண்டும். கிராமத்தில் இருந்து வந்திருக்கிறான் என, என்னை மிரட்டி பார்த்தால், பதிலடி அப்படி தான் இருக்கும். நாளைக்கு கூட, நான் என் தோட்டத்தில் சென்று விவசாயம் பார்ப்பேன்; ஆனால், முதல்வர், தியாக ராஜனால் முடியாது.


ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட, நான் இயேசு கிறிஸ்து கிடையாது; அடித்தால் திரும்ப அடிப்பேன். அதிரடியாக வந்தால், இரு மடங்கு அதிரடியாக வருவேன். இதனால், நான் எதை இழந்தாலும் கவலைப்பட மாட்டேன்.


மரியாதை அரசியலை தி.மு.க., செய்தால், நான் மரியாதையை இரட்டிப்பாக தருவேன்.நான் தன்மானம் உள்ள அரசியல்வாதி. எதையும் விற்று பிழைக்க அரசியலுக்கு வரவில்லை. அண்டி பிழைக்க வேண்டிய அவசியம், அண்ணாமலைக்கு கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
02-செப்-202221:37:44 IST Report Abuse
Tamilan நேற்றுமுளைத்த காளான்களையெல்லாம் ஒரு சிலரைத்தவிர யாருமே கண்டுகொள்வதில்லை . மோடி கும்பலை நாட்டைவிட்டு விரட்டினால்தான் நாடு முன்னேறும் .
Rate this:
Cancel
K.Varadharajulu - Chennai,இந்தியா
02-செப்-202213:15:49 IST Report Abuse
K.Varadharajulu நீயெல்லாம் எப்படியா ஐ பி எஸ் பாஸ் பண்ணுன நீயும் உன்னோட கோமாளி அரசியலும் , நீ கோப்பி அடிச்சுதான் பாஸ் பண்ணி இருப்ப போல உன் வாயில் இருந்து வரும் வார்த்தைகளை பார்த்தல் நீ சரியான ...என்றே தெரியுது
Rate this:
Anand - chennai,இந்தியா
02-செப்-202218:34:46 IST Report Abuse
Anandஅவரைப்பற்றி தூற்றும் நீயெல்லாம் எப்படி உயிர் வாழறேன்னு தெரியலே, ....
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
02-செப்-202212:38:02 IST Report Abuse
J. G. Muthuraj இதுஒரு பொன்மொழின்னு திருப்பி திருப்பி போடுறீங்களே..முதல்ல இயேசுவைப்பற்றி அவருக்கு தெரியல.. ரெண்டாவது, காவல் துறை சேவை கோட்பாடு தெரியாதவன் தான் திருப்பி அடிப்பேன்னு பேசுவான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X