பொதுத்துறை நிறுவனங்களுக்கு சலுகைகள் இல்லை: தமிழக அரசு உத்தரவு

Added : செப் 02, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: 'அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் அனைத்தும், பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு பொருந்தாது. அரசு அனுமதி பெறாமல், எந்த சலுகைகளையும் அனுமதிக்கக் கூடாது' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் முருகானந்தம் கூறியுள்ளதாவது:அரசு ஊழியர்கள் சலுகை தொடர்பான அரசாணைகள் அனைத்தும், பொதுத் துறை நிறுவனம் மற்றும் வாரியங்களுக்கு பொருந்தாது. ஊதிய
பொதுத்துறை நிறுவனங்கள், சலுகைகள், தமிழக அரசு, PSUs, TNGovernment,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் அனைத்தும், பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு பொருந்தாது. அரசு அனுமதி பெறாமல், எந்த சலுகைகளையும் அனுமதிக்கக் கூடாது' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் முருகானந்தம் கூறியுள்ளதாவது:அரசு ஊழியர்கள் சலுகை தொடர்பான அரசாணைகள் அனைத்தும், பொதுத் துறை நிறுவனம் மற்றும் வாரியங்களுக்கு பொருந்தாது. ஊதிய மாற்றம், பணி சலுகை போன்றவற்றை, அப்படியே தங்கள் ஊழியர்களுக்கு அமல்படுத்தக் கூடாது. அதற்கு, அரசு ஒப்புதல் பெற வேண்டும்.



latest tamil news

அரசு சலுகைகள் அனைத்தையும் நிதித் துறை ஒப்புதல் பெறாமல் அமல்படுத்துவதால், நிதிச்சுமை கூடுதலாகிறது. இது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அல்ல.எனவே, அரசு ஊழியர் சலுகை அனைத்தையும், அவர்கள் கோர முடியாது.



நிறுவனங்கள் தனித்து செயல்படுபவை. எனவே, அவை நிதி நிலையை பொறுத்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே சில வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளன; அவற்றை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

M S RAGHUNATHAN - chennai,இந்தியா
02-செப்-202215:34:32 IST Report Abuse
M S RAGHUNATHAN அப்படி என்றால் TNEB, Transport Corporation ஆகியவற்றுக்கு போனஸ் போன்ற சலுகைகள் கிடைக்குமா கிடைக்காதா ? ஏனெனில் இவை பெரும் கடன் சுமையில் இருக்கிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி. இது ஒன்று தான் இப்போது cash rich.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
02-செப்-202211:39:57 IST Report Abuse
duruvasar முதலில் பொதுத்துறை தலைவர்களாக குறைந்தபட்சம் ஒரு நோபல் பரிசு பெற்றவரை மட்டுமே நியமிக்கவேண்டும் என ஆணை பிறப்பியுங்கள். முதலமைச்சர் 5 வது படித்தரவாக இருந்தால் கூட அமைச்சரவையில் குறைந்தபட்சம் ஒரு 2 பி ஹெச்டி , ஒரு நோபல்பரிசாவது பெற்றவர் இடம்பெற்றிருக்கவேண்டும்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
02-செப்-202208:04:34 IST Report Abuse
GMM போக்குவரத்து, மின் வாரியம், ஆவின், வீட்டு வசதி, டாஸ்மாக்.. போன்ற வாரிய/ நிறுவன ஊழியர்களுக்கு அரசு ஊழியர் போல் சலுகை இல்லை என்றால், அரசு இதன் நிர்வாகத்தில் தலையிட கூடாது. மகளிர் இலவசம், மின்சாரம் இலவசம்... போன்றவற்றால் நிதி நெருக்கடி. இவை மக்களுடன் நேரடி தொடர்பு உள்ள துறைகள். சலுகை குறைப்பு ஆட்சிக்கு நெருக்கடி தரும்.
Rate this:
Raa - Chennai,இந்தியா
02-செப்-202213:16:27 IST Report Abuse
Raaஇந்த வாரியங்கள் எல்லாம் ஆமை புகுந்து வாரப்பட்ட வீடுகள் . வாழவும் விட மாட்டார்கள்....சாகவும் விடமாட்டார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X