கடலுார்-கடலுார் மாவட்டத்தில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தாக்கத்தால் அதிக மழை பெய்து வருகிறது. நேற்று காலை துவங்கிய மழை பகல் 12:00 மணி வரை நீடித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. நேற்று முன்தினம் காலை 8:00 முதல், நேற்று காலை 8:00 மணி வரை மாவட்டத்தில் மழை அளவு வருமாறு:கீழ்ச்செருவாய் 106 மி.மீ., பெலாந்துரை 84.2, தொழுதுார் 47, வடக்குத்து 33, காட்டுமன்னார்கோவில் 33, வேப்பூர் 23, கொத்தவாச்சேரி 20, குறிஞ்சிப்பாடி 19, கலெக்டர் அலுவலகம் 18, குடிதாங்கி 12.5, லக்கூர், பண்ருட்டி 11, கடலுார் 9.6 வானமாதேவி 9, அண்ணாமலை நகர் 9, சிதம்பரம் 4.5 மி.மீ, பரங்கிப்பேட்டை 2.8, சேத்தியாத்தோப்பு 2.2, விருத்தாசலம் 2.2, ஸ்ரீமுஷ்ணம் 2.1, மேமாத்துார் 2, குப்பநத்தம், புவனகிரியில் 1 மி.மீ மழை பதிவானது.மழையால் டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பெண்ணையாற்றில் 10,500 கன அடி தண்ணீர் திறந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக கொள்ளிடம் ஆறு மூலம் கீழணைக்கு 1,55,000 கன அடி தண்ணீர் வருகிறது. கீழணையில் இருந்து வடவாற்றில் 661 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்கால் 134, தெற்கு ராஜன் வாய்க்கால் 161, குமுக்கிமன்னியாறு 46 கன அடி வீதம் திறந்துவிடப்படுகிறது. உபரி நீர் 1.45 லட்சம் கன அடி தண்ணீர் கீழ் கொள்ளிடத்தில் வெளியேற்றப்படுகிறது.கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.