இந்தியா எதிர்கொள்ளும் சவால்களுக்கு பதில் ஐஎன்எஸ் விக்ராந்த்: பிரதமர்
இந்தியா எதிர்கொள்ளும் சவால்களுக்கு பதில் ஐஎன்எஸ் விக்ராந்த்: பிரதமர்

இந்தியா எதிர்கொள்ளும் சவால்களுக்கு பதில் ஐஎன்எஸ் விக்ராந்த்: பிரதமர்

Updated : செப் 02, 2022 | Added : செப் 02, 2022 | கருத்துகள் (43) | |
Advertisement
கொச்சி: இந்தியா எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் பதிலாக ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் கடலில் உருவெடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடந்த விழாவில், ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்திய கடற்படைக்கு பெருமை மிகு வரலாறு உள்ளது.
இந்தியா எதிர்கொள்ளும் சவால்களுக்கு பதில் ஐஎன்எஸ் விக்ராந்த்: பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொச்சி: இந்தியா எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் பதிலாக ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் கடலில் உருவெடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடந்த விழாவில், ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்திய கடற்படைக்கு பெருமை மிகு வரலாறு உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் ஒவ்வொரு இந்தியர்களின் பெருமை. இது இந்தியர்களின் பெருமை. இந்தியர்களின் திறமை, மன உறுதிக்கு உதாரணமாக இந்த கப்பல் உள்ளது. இந்தியா எதிர்கொள்ளும் சவால்களின் பதிலாக கப்பல் கடலில் உருவெடுத்துள்ளது. கேரள கடற்கரையில் இருந்து இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு விடியல் பிறந்துள்ளது.latest tamil news

தற்சார்பு பாரதத்தின் பெருமைமிகு அடையாளமாக கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

விமானந்தாங்கி கப்பலை சொந்தமாக தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. வடிவமைப்பிலும், திறனிலும் இந்த போர்க்கப்பல் ஒரு மிதக்கும் நகரம். இந்த கப்பலின் 76 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை. இந்திய கடற்படையில் மிச்சமிருந்த காலனி ஆட்சியின் குறியீட்டை இன்று அகற்றியுள்ளோம். இவ்வாறு மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (43)

MARUTHU PANDIAR - chennai,இந்தியா
03-செப்-202209:23:56 IST Report Abuse
MARUTHU PANDIAR சீனாவுக்காக வங்காள விரி குடாவிலும், பாக்.குக்காக அரபிக் கடலிலும் நிற்க வைக்க இவை கட்டாயம் தேவை+++++சீன மற்றும் இரு குடும்ப அடிமைகள் தமிழகத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இலங்கை என்பது இன்று சீனாவின் ஒரு பகுதியாக மாறும் என்பதை அன்றே கணித்தது தான் மத்திய அரசின் புத்திசாலித்த தனம்+++
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
02-செப்-202222:07:50 IST Report Abuse
மனிதன் இன்று, இந்தியா எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும், நீங்கள் மட்டுமே காரணம் ஜி.....பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகியிருக்க, ஏழைகள் மேலும் ஏழைகளாகி இருக்கிறார்கள்...வறுமை கோட்டிற்கு கீழே சென்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது...எதார்த்தம் இப்படி இருக்க, நீங்கள் மக்களுக்கு, தங்கமழை பொழியுமென்றும்,பாலாறு ஓடுமென்றும் அம்புலிமாமா கதை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்...இந்த ஒரு கப்பலினால் இந்தியாவின் எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடுமாம்...மக்களை ஒரு உணர்ச்சிக்கு அடிமையாகவே வைத்திருக்கிறீர்கள்... வடிவேலுவுக்கு பதில்,மக்கள் சொல்கிறார்கள்...இப்படி உசுப்பேத்தி,உசுப்பேத்தியே எங்களை ரணகளம் பண்ணிட்டியேப்பா....
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
02-செப்-202219:57:01 IST Report Abuse
Vena Suna விஜயன் முகத்தில் ஈ ஆடவில்லை.
Rate this:
Soumya - Trichy,இந்தியா
02-செப்-202223:22:24 IST Report Abuse
Soumyaஅந்த தேசத்துரோகி பேயறைஞ்சவன் மாதிரி இருக்கா ஹாஹாஹா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X